தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் செயற்பாடுகளை அமெரிக்காவில் உள்ள இரண்டு தமிழ் அமைப்புக்கள் கண்டித்துள்ளன.
ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு மற்றும் அமெரிக்க தமிழ் பேரவை என்பன இந்த கண்டனத்தை வெளியிட்டுள்ளன.
அமெரிக்க காங்கிரஸின் உத்தியோகபற்றற்ற அமைப்பு ஒன்றின் நிகழ்வில் பங்கேற்க சுமந்திரன் அமெரிக்காவுக்கு செல்லவுள்ளார்.
அவர், அங்கு இலங்கையின் தூதுவர் பிரசாத் காரியவசத்துடன் இணைந்து உரையாற்றவுள்ளார்.
இதன் அடிப்படையில் தமிழர் ஒருவர் தமிழர்களுக்காக அல்லாமல் இலங்கை அரசாங்கத்துக்காக பேசும் நிலையே உருவாகியுள்ளது.
சுமந்திரனை பொறுத்தவரையில் அவர் ஏற்கனவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதற்கு முன்னர் மஹிந்த ராஜபக்சவின் காலத்தில், தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டாக இயங்கி வந்தவராவார்.
தற்போதும் அந்த உறவு தொடர்கிறது என்று அமெரிக்காவின் இரண்டு தமிழ் அமைப்புக்களும் குற்றம் சுமத்தியுள்ளன.
சுமந்திரனுக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்க காங்கிரஸின் அமைப்பு, காங்கிரஸின் செல்வாக்கை பெற்ற அமைப்பல்ல, கடைநிலை காங்கிரஸ் உறுப்பினர்களே அதில் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்களை முன்வைக்கவே சுமந்திரன் அழைக்கப்பட்டுள்ளதாக தமிழ் அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments:
Post a Comment