தமிழ்நாட்டு முதல்வராக மீண்டும் செல்வி ஜெயராம் ஜெயலலிதா தெரிவாகியதையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
வருங்காலத்தில் செல்வி ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்வார் என எதிர்பார்க்கின்றேன்.
தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக்கியதிலிருந்து மக்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கை எடுத்துக்காட்டுகின்றது.
அதனால் அவர் தொடர்ந்தும் தமிழ்நாட்டு தமிழ் மக்களுக்கும் ஈழத் தமிழ் மக்களுக்கும் தொடர்ந்தும் பல நன்மைகளைச் செய்யவேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் என தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment