March 2, 2015

தமிழினவழிப்பிற்கு நீதி கோரி 26 வது நாளாகத் தொடரும் விடுதலைச் சுடர் பயணம்.!

தமிழினவழிப்பிற்கு நீதி கோரி 04.02.2015 அன்று தொடக்கம் ஜெனிவா நோக்கி பயணித்து வரும் விடுதலைச் சுடர் பயணம் பிரித்தானியா, பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து நாடுகளினூடாக பயணம் செய்து நேற்றையதினம்
(28.02.2015) யேர்மனியை வந்தடைந்தது. நேற்றையதினம் யேர்மனியில் முன்ஸ்டர் (Münster), Osnabrück நகரங்களினூடாக பயணம் செய்து 26 வது நாளான இன்று (01.03.2015) ப்ரேமன் (Bremen) நகரை வந்தடைந்து.


Osnabrück நகரில் இருந்து தமிழ் உணர்வாளர் திரு அவர்களால் எடுத்துவரப்பட்ட சுடர் இன்று ப்ரேமன் (Bremen) நகரில் தமிழ் உணர்வாளர் செந்தூரன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது. மதியம் 12:00 மணியளவில் ப்ரேமன் நகர் Domsheide Marktplatz ல் விடுதலைச் சுடர் பயணம் அகவணக்கத்துடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து யேர்மனிய அரசின் மணித உரிமை ஆணையாளர் Christoph Strässer அவர்களால் அனுப்பி வைக்கப்பட்ட வாழ்த்துக் கடிதம் வாசிக்கப்பட்டது.

விடுதலைச் சுடர் ப்ரேமன் நகர மையப்பகுதி வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இதன்போது சிங்கள அரசினால் 67 ஆண்டுகளாக திட்டமிட்டு நடாத்தப்பட்டு வரும் இனவழிப்பை விபரிக்கும் துண்டுப்பிரசுரங்கள் மக்களிற்கு வழங்கப்பட்டது. ப்ரேமன் புகையிரத நிலையம் வரை எடுத்துவரப்பட்ட விடுதலைச் சுடர் 14:00 மணியளவில் ப்ரேமன் நகரில் நிறைவு செய்யப்பட்டு Hamburg நகர மக்களிடம் கையளிப்பதற்காக எடுத்து செல்லப்பட்டது.
நாளைய தினம் (02.03.2015) Hamburg நகர புகையிரத நிலையத்தில் 16:00 மணியளவில் விடுதலைச் சுடர் பயணம் நடைபெறவுள்ளதால் அனைத்து மக்களையும் தமிழினவழிப்பிற்கு நீதி கோரி நடைபெறும் இவ் பயணத்தில் உணர்வுடன் கலந்துகொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம்.
நாள்: 02.03.2015
நேரம்: 16:00
நடைபெறும் இடம்: Hamburg Hauptbahnhof (ZOB)

No comments:

Post a Comment