தமிழ் முஸ்லிம் மக்கள் இலங்கையின் அரசியல் தலைவிதியை பெப்ரவரி 8ஆம்
திகதி மீள எழுதி வைத்தனர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் 20 வருடங்களுக்கு
மேல் அரசாளும்;
திட்டத்துடன் பெப்ரவரியில் மஹிந்த தேர்தலில் களம் இறங்கினார். ஆனால் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் தமிழ் பேசும் மக்கள் முறியடித்துவிட்டனர். தமிழ் பேசும் மக்களிடையே எழுந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அலையை சரிவரக் கணித்துக் கொண்ட தமிழ்பேசும் தலைமைகள் குறிப்பாக முஸ்லிம் தலைமைகள் தமக்கான அரசியல் பயணத்திற்கேற்ற வகையில் அறுவடையாக்கிக் கொண்டுள்ளனர்.
தமிழ் முஸ்லிம் மக்கள் இலங்கையின் அரசியல் தலைவிதியை பெப்ரவரி 8ஆம் திகதி மீள எழுதி வைத்தனர். இலங்கையின் அரசியல் வரலாற்றில் 20 வருடங்களுக்கு மேல் அரசாளும்; திட்டத்துடன் பெப்ரவரியில் மஹிந்த தேர்தலில் களம் இறங்கினார். ஆனால் இந்தத் திட்டங்கள் அனைத்தையும் தமிழ் பேசும் மக்கள் முறியடித்துவிட்டனர். தமிழ் பேசும் மக்களிடையே எழுந்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அலையை சரிவரக் கணித்துக் கொண்ட தமிழ்பேசும் தலைமைகள் குறிப்பாக முஸ்லிம் தலைமைகள் தமக்கான அரசியல் பயணத்திற்கேற்ற வகையில் அறுவடையாக்கிக் கொண்டுள்ளனர்.
முஸ்லிம் தலைமைத்துங்களின் சந்தர்ப்பவாத அரசியலால் முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுகின்றதோ இல்லையே முஸ்லிம் அரசியல் வாதிகளின் அபிலாஷைகள் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்தில் போன்று தற்போதும் நிறைவேறியுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தி;தைப் போன்று தற்போதைய மைத்திரிபால சிறிசேன ஆட்சிக் காலத்திலும் முஸ்லிம் தலைமைகளின் அமைச்சுப் பதவிகளை வாரிச்சுருட்டிக் கொண்டுள்ளனர்.
இதற்கும் அப்பால் முஸ்லிம் தலைமைகள் கரையோர மாவட்ட அலகு கருத்தியலில் இருந்து மாறுபட்டு வடக்கு தமிழர்களுக்கு கிழக்கு முஸ்லிம்களுக்கு என்ற எண்ணப்பாட்டை நிலை நிறுத்த தொடங்கியது மாத்திரமல்ல கிழக்கு மாகாண சபையின் முதல்வர் முஸ்லிம்களாகவே இருக்கவேண்டும் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அதாவது சிங்களத் தலைமைகளின் பாணியில் முஸ்லிம் தலைமைகளும் தமது அரசியல் பயணத்தை தொடங்கியுள்ளனர். இந்தப் பயணம் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பாக் கிழக்கு மாகாண தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. சிங்கள முஸ்லிம் சக்திகளின் அச்சுறுத்தல்களுக்குள் காலம் தள்ளிய கிழக்கு மாகாண தமிழ் மக்கள் முஸ்லிம் தலைமைகளின் புதிய அரசியல் பிரவேகமானது கிழக்கு மாகாணத்தில் தமது இருப்புக்கு அச்சுறுத்தலாக முடியும் என்ற பயபீதியில் உள்ளனர்.
அது மாத்திரமல்ல சிங்கள இராஜதந்திரத்திடம் தொடர்ந்தும் தோல்விகளை சந்தித்து வரும் தமிழர் தலைமைகள் முஸ்லிம் இராஜதந்திரத் திடமும் மண்டியிடப் போகிறது என்று ஒட்டு மொத்த தமிழினமும் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளது.
முஸ்லிம் தலைமைகள் தமிழ்த் தலைமைகளுடன் இணைந்து போவதைவிட சிங்களத் தலைமைகளுடன் இணைந்து போனதே வரலாறாக இருக்கின்றது. இவ்வாறான இணைந்த அரசியலால் முஸ்லிம் மக்கள் எந்தளவுக்கு நன்மைகளைப் பெற்றனர் என்பது கேள்விக் குறியாகும். ஆனால் முஸ்லிம் தலைமைகள் தமது அரசியல் பயணத்திற்கும் தமது சுயநலன்களுக்கும் சிங்களத் தலைமைகளுடனான இணைந்த அரசியலை மிக அதிகமாகவே பயன்படுத்திக் கொண்டது மாத்திரமல்ல பயனையும் அடைந்துகொண்டுள்ளன.
இது குறித்து பேச முற்படுவதானது தமிழர் தரப்பு இனவாத நோக்கில் சிந்திப்பதாக முஸ்லிம் தரப்பு கூறத் தொடங்குவர். ஆனால் இறுதிக் கட்டப்போரில் கொத்து கொத்தாக தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட போது கிழக்கு மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் கொழும்பு மற்றும் இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் வாழ்ந்த வாழ்கின்ற முஸ்லிம் மக்கள் பாற்சோறு சமைத்து கைகோர்த்து கொண்டாடினர். தமது உறவுகளையும் இழந்து இரத்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்த தமிழ் மக்களின் இதயங்களை பிளந்து மிளகாய்ப்பொடி தடவியது போன்ற உணர்;வை வேதனையை தமிழ் மக்கள் அனுபவித்தனர்.
அதுமட்டுமல்ல தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்ற அநீதிகளை நியாயப்படுத்தி முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் கைகோர்த்து வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜெனிவாவுக்குச் சென்றும் தமிழர்களுக்கு நீதி கிடைத்துவிடக் கூடாதென குரல் எழுப்பினர்.
ஆனால் இராகமையிலும் பேருவளையிலும் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கியழிக்கப்பட்டபோதும் முஸ்லிம் மக்கள் தாக்கப்பட்டபோதும் தமிழ் மக்கள் சிங்கள அராஜகத்திற் எதிராக குரல் கொடுத்தனர். முஸ்லிம் மக்களுக்கு எதிரான சிங்கள பேரினவாதத்தின் காடைத்தனங்களுக்கு எந்த ஒரு தமிழ் மகனும் துணைப் போகவில்லை. பேரினவாதச் சக்திகளுடன் தமிழர்கள் கைகோர்த்து நடக்கவும் இல்லை என்பதை எந்த ஒரு முஸ்லிம் மகனும் மறுப்பதற்கில்லை.
அந்த இக்கட்டான நேரத்தில் முஸ்லிம் தலைமைகளும் முஸ்லிம் மக்களும் தமிழ் மக்களின் ஆதரவை அரவணைக்கக் கோரியபோது தயங்காது களத்தில் இறங்கி பேரினவாதச் சக்திகளுக்கு எதிராக தமிழ் மக்கள் செயற்பட்டனர்.
ஆனால் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி மாற்றத்துடன் தமக்கான அனைத்து அச்சுறுத்தல்களும் போய்விட்டன என்ற நினைப்பில் தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் பாதையை முஸ்லிம் தலைமைகள் செப்பனிடத் தொடங்கிவிட்டனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் மறைவுடன் சிங்கள மக்களும் தலைமைத்துவங்களும் மாத்திரமல்ல முஸ்லிம் மக்களும் அவர்கள் சார்ந்த தலைமைத்துவங்களும் தமிழ் மக்களை இலகுவில் ஓரம் கட்டலாம் என்ற நினைப்பாட்டுக்கு வந்துள்ளனர்.
அந்த வகையில் தமிழ் மக்களுக்கான அரசியல் பயணம் முள்ளிவாய்க்காலையும் விட மிக மோசமான பயணமாக இருக்கப்போகிறது. சுமார் இரு வருடங்களுக்கு முன் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் தீர்க்க தரிசனமாகக் கூறிய வார்த்தையை இங்கு குறிப்பிடுதல் பொருந்தும்:
~தமிழ் மக்களுக்கு எதிரான உண்மையான போர் தற்போதுதான் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அது முள்ளிவாய்க்கால் போரினை விட மோசமானது. கொடூர மானது.| இந்தப் போர் தமிழ் மக்களின் ஒட்டுமொத்த இருப்புக்காக ஆபத்தாக முடியும். இனம் மொழி கலாசார ரீதியில் பெரும் அழிவுக்குத் தமிழ் மக்களை இட்டுச்செல்வதாக அமையும்.
ஆயர் இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் இந்த எச்சரிகையை ஒவ்வொரு தமிழ் மகனும் சிந்தித்தாக வேண்டும். தமிழ் மக்களின் இருப்பு பாதுகாப்பு சுயகௌரவம் உரிமைகள் குறித்து பேசியபோதெல்லாம் சிங்களத் தலைமைகளும் தென்னிலங்கை பேரினவாதச் சக்திகளும் அது தனிநாட்டுக்கான கோரிக்கையென மறுத்திருந்தனர். அது போல் முஸ்லிம் தரப்பினரின் தமிழர் விரோதப்போக்கு குறித்து பேச முற்படும் போது அது தமிழர்களின் இனவாதப் போக்குகளை சித்திரிக்க முற்படுவர். அற்காக தமிழர்கள் பக்க நியாயத்தை எதிர்ப்பார்ப்பைக் கூறாதிருக்க முடியாது.
முஸ்லிம் மக்களுக்கு தமிழ் மக்களே நேச சக்தியாக இருக்க முடியும். சிங்களத் தரப்பு அல்ல? தமிழ் மக்களுக்கு எதிராக சிங்களத் தரப்பு முஸ்லிம் மக்களையும் முஸ்லிம் தலைமைகளையும் பயன்படுத்தியமை வரலாற்றுப் பதிவுகளாக பல உள்ளன. தமிழர்களுக்கு எதிரான பயணத்தில் சிங்களச் சக்திகளுடன் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் தலைமைத்துவங்களும் கைகோர்த்து நடந்தபோதும் சிங்களத் தரப்பு அவர்களை நேச சக்தியாகக் கருதி அரவணைத்து செல்வதற்கு தயாராக இல்லை என்பதற்கு அண்மைக்கால சம்பவங்கள் நிரூபித்துள்ளன.
மஹிந்த ராஜபக்ஷவின் கைகளில் இருந்து மைத்திரிபால சிறிசேனவின் கைகளுக்கு ஆட்சி மாறியதானது முஸ்லிம் மக்களின் அல்லது தமிழ் மக்களின் பாதுகாப்பு உறுதி படுத்தப்படுள்ளதென்ற முடிவுக்கு வருவதற்கான எந்தவித உத்தரவாதத்தையும் வழங்குவதாக இல்லை என்பதை தமிழ் பேசும் மக்கள் உணர்ந்தாக வேண்டும்.
அந்த வகையில் தமிழ் முஸ்லிம் இனங்கள் புரிந்துணர்வுடன் விட்டுக் கொடுப்புடன் நல்லிணகத்துடன் கைகோர்த்துப் பயணிப்பதே இலங்கை அரசியலில் தமிழ் பேசும் மக்களுக்கு நன்மை பயப்பதாக அமையும்.
- வி.தேவராஜ்

No comments:
Post a Comment