கட்சிக்கு துரோகம் இழைத்த எவருக்கும் வேட்பு மனு வழங்கப்படாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு துரோகம் இழைத்த மற்றும் விமர்சனம் செய்தவர்களுக்கு வேட்பு மனு வழங்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியையும் தலைமைத்துவத்தையும் சில தரப்பினர் தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு விமர்சனம் செய்யும் நபர்களுக்கு இம்முறை உள்ளுராட்சி மன்றத்தேர்தல்களின் போது போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் அளிக்கப்படாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளுராட்சி மன்ற வேட்பாளர்களை தெரிவு செய்யும் நேர்முகத் தேர்வு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் தகுதியான திறமையான இளையவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
கட்சிக்குத் துரோகம் இழைத்த முன்னாள் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் இந்த தேர்தலில் போட்டியிட கட்சி சந்தர்ப்பம் அளிக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment