பாரிஸிலிருந்து கெய்ரோ நோக்கி 69 பயணிகளுடன் புறப்பட்ட எகிப்திய விமானமொன்று நடுவானில் வைத்து மாயமாக மறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானத்தில் 59 பயணிகளும் 10 பணியாளர்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஈஜிப்ட் ஏயார் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான எம்.எஸ். 804 என்ற விமானமே சற்றுநேரத்திற்கு முன்னர் றேடார் கருவியின் தொடர்பை இழந்துள்ளது.
இந்த விமானம் கிழக்கு மெடிடரேனியன் பகுதியில் சுமார் 37 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருக்கும்போதே மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment