இலங்கையில் ஏற்ப்பட்ட யுத்தத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்பு கொஞ்சமல்ல. பல மக்கள் இதனால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர்.
அந்த வகையில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நடுவில் அமைந்துள்ள தீவு புங்குடுதீவு.
உவர் நிலமான இந்த தீவில் 1990 களில் 20 ஆயிரம் மக்கள் வாழ்ந்துள்ளனர். இங்குள்ள பலர் தங்கள் நிலங்களை விட்டு யுத்தத்தால் அங்கு வாழ முடியாத சூழ்நிலையில் அங்கிருந்த 90 வீதம் மக்கள் புலம் பெயர்ந்து விட்டனர்.
இதனால் அங்குள்ள பெரும்பாலான வீடுகள் சிதைந்து கிடக்கின்றதாம். இந்த நிலங்களைப்பற்றியும், அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையையும் தங்கேஸ் பரம்சோதி என்ற இளம் இயக்குனர் ஆவணப்படுத்தியுள்ளார்.
புங்குடுதீவு சிதைவுறு நிலம் என்ற இந்த ஆவணப்படம் சமீபத்தில் லண்டனில் உள்ள Harrow Council Chamberல் வெளியிட்டுள்ளார்.
இந்நிகழ்வுக்கு டேவிட் நிராஜ், இளையதம்பி தயானந்தா, பிரேம் கதிர், சாம் பிரதீபன், பத்மநாப ஐயர், சுஜித்ஜி போன்ற ஊடக மற்றும் கலைத்துறை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
ஆவணப்படத்தை பார்த்த பலரும் தங்கள் கருத்துக்களை அங்கும், சமூக வலைத்தளங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றனர். ஆவணப்படத்துக்கு இந்தளவுக்கு வரவேற்பு கிடைத்தது பாராட்டுக்குரிய விடயம் என்பது குறிப்பிடத்தக்கது
.
No comments:
Post a Comment