முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அமதிபுரம் கிராமத்தில் தொடர்ச்சியான கிரவல் மண்அகழ்வினால் அக்கிராமத்தில் காணப்பட்ட பெருமளவான பாரிய மரங்கள்அழிக்கப்பட்டுள்ளன.
இக்கிராமத்தில் பல இடங்களில் இடம்பெற்ற மண் அகழ்வினால்கிராமத்தின் பெருமளவான பகுதிகள் கிடங்கும் பள்ளமுமாகக் காணப்படுகின்றன.
அமதிபுரம் கிராமத்தில் இடம்பெற்ற தொடர்ச்சியான கிரவல் மண் அகழ்வு காரணமாகபாரிய மரங்களைக் கொண்டிருந்த கிராமம் தற்போது மரங்கள் அழிக்கப்பட்ட நிலையில்பாலைவனம் போலக் காட்சியளிப்பதை அவதானிக்க முடிகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேசத்தின் கீழ் காணப்படும் அமதிபுரம்கிராமம் ஒருகாலத்தில் வனவளத்தையும் வயல் நில வளத்தையும் தன்னகத்தே கொண்டுஇயற்கை எழில் நிறைந்த கிராமமாகக் காட்சியளித்தது.
ஆனால் கடந்த 2009 ஆம் ஆண்டுகாலப்பகுதியின் பின்னர் இப்பகுதியில் இடம்பெற்ற தொடர்ச்சியான திட்டமிடப்படாத,சட்டவிரோத கிரவல் மண் அகழ்வு காரணமாக இக்கிராமத்தின் வளங்கள் அழிக்கப்பட்டுவளம் பொருந்திய கிராமம் சுடுகாடு போலக் காட்சியளிக்கின்றது.
வீதிகள் அமைத்தல், புகையிரதப் பாதை அமைத்தல், கட்டிடங்கள் அமைத்தல், இராணுவத்தேவைகளுக்காக எனப் பல செயற்பாடுகளுக்காக கடந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர்அமதிபுரம் கிராமத்திலிருந்தே தொடர்ச்சியாக மண் அகழப்பட்டுள்ளது.
அமதிபுரம் கிராமத்தில் இடம்பெற்ற திட்டமிடப்படாத பெருமளவான மண்ணகழ்வு காரணமாகஇக்கிராமம் சூழலியல் ரீதியாகப் பாரிய பாதிப்பை எதிர்கொண்டுள்ளது.
இதேவேளை முல்லைத்தீவு, கிளிநொச்சி மாவட்டங்களின் பல கிராமங்களில் தற்போதும்தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சட்டவிரோத மணல் மண்ணகழ்வு, கிரவல் மண்ணகழ்வுகாரணமாக நிலவளம், வனவளம் என்பன சிதைத்தழிக்கப்பட்டு வருவதுடன் எதிர்காலத்தில்பாரிய சூழல் பாதிப்புக்கள் ஏற்படவுள்ளதாகவும் இவ்விடயத்தில் பொறுப்புவாய்ந்தஅதிகாரிகள் உடனடியாகவே கவனம் செலுத்தி தகுந்த நடவடிக்கை எடுத்து இதனைத்தடுக்கமுன்வரவேண்டும் என பலரும் எதிர்பார்க்கின்றார்கள்.
No comments:
Post a Comment