May 24, 2016

யாழ்.நகர அபிவிருத்தி குறித்து ஆலோசனை வழங்க குழு அமைப்பு!

யாழ்.நகர அபிவிருத்தி தொடர்பாக ஆலோசனைகளை வழங்குவதற்கு, வட மாகாண ஆளுநரால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

யாழ்.நகரை அபிவிருத்தி செய்வது தொடர்பான கலந்துரையாடலொன்று, வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில், அவரது அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.
இதன்போது, யாழ்.மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நகர அபிவிருத்தி திணைக்களத்தினால், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டன. அதனையடுத்து, ஆளுநரால் குழுவொன்றும் நியமிக்கப்பட்டது. குறித்த குழுவின் சிபாரிசுகளின் அடிப்படையிலேயே, யாழ்.நகரப்பகுதியின் முக்கிய இடங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இன்றைய கலந்துரையாடலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், ஈ.சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள், மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பிரதிநிதி, யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதம செயலாளர் பத்திநாதன், யாழ்.மாநகர ஆணையாளர் பா.வாகீசன் மற்றும் பல அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
உலக வங்கியின் 55 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியில் மேற்கொள்ளப்படவுள்ள யாழ்.நகர அபிவிருத்தி திட்டம், எதிர்வரும் ஜூன் மாதம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment