வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட யோசனை, மக்களுக்கும் சென்றடையும் வகையில், இன்று ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது.
புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கும் வகையிலான தீர்வுத்திட்ட யோசனையொன்று, கடந்த ஏப்ரல் மாதம் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.
குறித்த தீர்வுத்திட்ட யோசனையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள், மக்களுக்கும் சென்றடையவேண்டும் என்ற அடிப்படையில், இன்று வட மாகாண சபையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
இதன்போது, வட மாகாண சபையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத்திட்ட யோசனையானது, தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது.
வட மாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர், இந்த தீர்வுத்திட்ட யோசனையை ஊடகங்களுக்கு வெளியிட்டனர்.
அரசாங்கத்தால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில், சமஷ்டி அடிப்படையிலான தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் மாநில சுயாட்சியை அடிப்படையாகக் கொண்டு, அதிகார பகிர்வுகள் வழங்கப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி, வட மாகாண சபையால் நிறைவேற்றப்பட்ட குறித்த தீர்மானத்திற்கு, தென்னிலங்கையிலிருந்து பலத்த எதிர்ப்புகள் வெளிப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment