August 11, 2014

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் வைகோ!

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக
கடந்த 8–ந் தேதி கிழக்கு கடற்கரை சாலை கேளம்பாக்கம் வழியாக சென்றார். அப்போது திடீரென்று ஏற்பட்ட நெஞ்சுவலியால் வைகோ அவதிப்பட்டார்.

அதைத்தொடர்ந்து கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக அன்றைய தினம் மதியம் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைகோ அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 2 நாட்களாக வைகோ தங்கி சிகிச்சை பெற்றார். இந்தநிலையில் உடல் நலம் தேறியதையடுத்து நேற்று இரவு 9.50 மணிக்கு வைகோ வீடு திரும்பினார்.

வைகோவை சிறிது நாட்கள் ஓய்வில் இருக்கும்படி டாக்டர்கள் அறிவுரை வழங்கி உள்ளனர்.

No comments:

Post a Comment