வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனுக்கும்
மனைவிக்கும் இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன் கத்தியால் மனைவியை குத்தியதால் மனைவி வவுனியா பொது வைத்தியசாலையில் அவசரப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இது தொடர்பாக தெரிய மேலும் வருவதாவது..
நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வவுனியா சமயபுரம் பகுதியில் உள்ள வீடொன்றில் கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதில் மனைவியை கணவன் கத்தியால் குத்தியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக காயமடைந்த பெண்ணின் உறவினர் தெரிவிக்கையில்..
நேற்று முன்தினம் இரவு கணவனுக்கும் மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந் நிலையில் மனைவி கோபம் அடைந்த நிலையில் எமது வீட்டிற்கு வந்திருந்தார். இரவு 10 மணியளவில் மேற்படி பெண்ணின் கணவன் எமது வீட்டிற்கு வந்து மனைவியை வீட்டிற்கு வெளியே அழைத்துச் சென்று மனைவியை தடியால் அடித்ததைத் தொடர்ந்து பின் பக்கத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியால் மனைவியின் முதுகுப் பக்கமாக குத்தியுள்ளார். என சம்பவத்தை நேரில் கண்ட உறவினர் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்தவர் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றார். காயமடைந்தவர் வவுனியா சமயபுரத்தினைச் சேர்ந்த திருமதி பார்வதி சங்கர் (29) என தெரிய வருகின்றது.
இது தொடர்பாக வவுனியா காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் கணவன் தலைமறைவாகியுள்ளதால் காவல்துறையினர் அவரை தேடி வருகின்றனர்

No comments:
Post a Comment