வெள்ளம் மற்றும் மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பாகிஸ்தான் அரசும் முன்வந்துள்ளது.
இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவியை வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அந்நாட்டு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிகின்றன.
அதற்கமைய 30 படுக்கைகளை கொண்ட நவீன கள மருத்துவமனையையும், நிவாரணப்பொருட்களையும், பாகிஸ்தான் அனுப்பவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிவாரண பொருட்களில் சத்தரசிகிச்சை கூடம், எக்ஸ்ரே வசதிகள் , ஆய்வு கூடம், மருத்துவ பொருட்கள் அடங்கிய கள மருத்துவமனை மற்றும் மின்பிறப்பாக்கிகள், கூடாரங்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரணப்பொருட்களும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மருத்துவ உதவியை வழங்குவதற்காக 17 பாகிஸ்தானிய மருத்துவர்களும், இலங்கைக்கு வருகை தரவுள்ளனர்.
No comments:
Post a Comment