October 7, 2015

தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பம்!

தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட ஏனைய அர­சியல் கட்­சி­க­ளுடன் அர­சியல் தீர்­வொன்றைக் காண்­ப­தற்­காக ஏற்­க­னவே நாங்கள் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்து விட்டோம். கடந்த ஐந்து தசாப்­த­கா­ல­மாக இலங்­கையில்
மொழி மற்றும் இனப்­பி­ரச்­சினை முக்­கிய இட­மாக இருந்­த­துடன் கடந்த தசாப்­தத்தில் மதப் பிரச்­சி­னையும் உரு­வெ­டுத்­தது என்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று ஜப்பான் பாரா­ளு­மன்­றத்தில் ஆற்­றிய விசேட உரையில் தெரி­வித்தார்.புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­குதல், மனித உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­துதல், நிறு­வ­னக்­கட்­ட­மைப்பை பலப்­ப­டுத்­துதல் என்­பனஎமது அர­சியல் நோக்­கங்­களில் பிர­தா­ன­மாக காணப்­ப­டு­கின்­றன. அத்­துடன் தேசிய ஒற்­றுமை மற்றும் மத இனப்­பி­ரச்­சினை தொடர்பான விட­யங்­க­ளுக்கு அர­சியல் தீர்­வு­களை தேடு­வதே எமது முக்­கிய­மான நோக்­க­மாக அமைந்­துள்­ளது என்றும் பிர­தமர் குறிப்­பிட்டார்.ஜப்பான் பிர­தமர் மற்றும் அந்­நாட்டின் மக்கள் பிர­தி­நி­திகள் முன்­னி­லையில் நேற்­றுக்­காலை பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அந்­நாட்டின் பாரா­ளு­மன்­றத்தில் இந்த விசேட உரையை நிகழ்த்­தினார்.அந்த உரையில் மேலும் குறிப்­பி­டு­கையில்:-வரப்­பி­ர­சாதம் கிடைக்கப் பெற்ற ஒரு பிர­த­ம­ரா­கவே உங்­க­ளு­டைய பாரா­ளு­மன்­றத்தில் நான் இந்த உரையை நிகழ்த்­து­கின்றேன். ஜப்பான் மக்­களின் மரி­யாதை செலுத்­துதல் சகோ­த­ரத்­து­வத்தை வெளிக்­காட்­டுதல் உப­ச­ரிப்பு செய்தல் என்­ப­ன­வற்றில் நானும் எனது பிர­தி­நி­திகள் குழுவும் என்­னு­டைய பாரி­யாரும் மகிழ்ச்­சி­ய­டைந்தோம். ஜப்பான் அர­சாங்கம் மற்றும் ஜப்பான் மக்கள் எமக்கு வெளிக்­காட்டும் அன்பை நாங்கள் மகிழ்­வுடன் ஏற்­றுக்­கொள்­கின்றோம். இலங்கை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் இலங்கை பாரா­ளு­மன்­றத்தின் சார்­பாக எங்­க­ளது வாழ்த்­துக்­களை ஜப்பான் பிர­தமர் அர­சாங்கம் பாரா­ளு­மன்றம் மற்றும் மக்­க­ளுக்கு தெரி­விக்­கிறோம்.
சமா­தான உடன்­ப­டிக்கை
சுதந்­திரம் பெற்ற இலங்­கையின் முதல் பிர­தமர் டி.எஸ். சேனா­நா­யக்க ஜப்­பா­னுடன் சமா­தான உடன்­ப­டிக்­கை­யொன்றை 1952 ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் 29 ஆம் திகதி கைச்­சாத்­திட்டார். அதன் பின்னர் டி.எஸ். சேனா­நா­யக்கா ஜப்பான் தொடர்பில் ஒரு முக்­கிய அறி­விப்­பையும் வெளி­யிட்டார். அவ்­வாறு அறி­விப்பு வெளி­யிட்டு 22 தினங்­களில் டி.எஸ். சேனா­நா­யக்க திடீ­ரென கால­மானார். அவர் கால­மாகி ஒரு மாதத்தின் பின்னர் இலங்­கைக்கும் ஜப்­பா­னுக்­கு­மி­டையில் இரா­ஜ­தந்­திர உற­வுகள் ஆரம்­ப­மா­கின.
ஜே.ஆர். ஜய­வர்த்­தன
யுத்­தத்தின் பின்னர் மீண்டு வந்த உலகம் மேற்கு சக்­திகள் மற்றும் சோச­லிஷ குடி­ய­ர­சு­களின் அழுத்­தங்கள் இன்றி இருக்­க­வேண்டும் என்­பதே டி.எஸ். சேனா­நா­யக்­கவின் குறிக்­கோ­ளாக இருந்­தது. அத்­துடன் ஜப்பான், மீண்டும் பொரு­ளா­தார ரீதியில் எழுந்து நிற்­ப­தற்கு உதவ வேண்­டு­மென்­பதை அவர் நம்­பினார். அதன் தொடர்ச்­சி­யாக அப்­போது அமெ­ரிக்­காவின் சான் பிரான்­ஸிஸ்கோ நகரில் நடை­பெற்ற உலக சமா­தான மாநாட்டில் கலந்­து­கொள்ள அன்று இலங்­கையின் நிதி­ய­மைச்­ச­ராக இருந்த ஜே.ஆர். ஜய­வர்த்­த­னவை அனுப்­பி­யி­ருந்தார்.அவ்­வாறு ஜய­வர்த்­தன அமெ­ரிக்கா செல்லும் போது ஜப்­பானின் இம்­பி­ரியல் ஹோட்­டலில் இருந்து யுத்­தத்தால் அன்று பாதிக்­கப்­பட்­டி­ருந்த ஜப்­பானின் நிலைமை தொடர்­பாக அறிந்து கொண்டார். அந்த நேரம் ஜப்­பானின் பிர­த­ம­ராக இருந்த யோஷி­டா­வையும் ஜே.ஆர். ஜய­வர்த்­தன சந்­தித்­தி­ருந்தார். இக்­கா­லத்தில் இரண்டு நாடு­க­ளுக்­கு­மி­டையில் உறவு பாரிய அளவு வளர்ச்சி பெற்­றது.
ஜப்­பானின் உதவி
இந்த சம்­பவம் நடை­பெற்று 25 வரு­டங்­க­ளுக்கு பின்னர் ஜே.ஆர். ஜய­வர்த்­தன இலங்­கையின் பிர­த­ம­ரா­கவும், பின்னர் ஜனா­தி­ப­தி­யா­கவும் பத­வி­யேற்றார். அக்­கால கட்­டத்தில் ஜப்பான் உல்கின் சிறந்த பொரு­ளா­தார வளர்ச்சி கொண்ட நாடாக உரு­வெ­டுத்­தி­ருந்­தது. அந்த அர­சாங்­கத்தில் முத­லா­வது பிரதி வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக நிய­மிக்­கப்­பட்டு அக்­கா­லத்தில் ஜப்பான் இலங்­கையில் பாரிய அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்­தது. பல அத்­தி­யா­வ­சிய உத­வி­களை ஜப்பான் வழங்­கி­யது.ஸ்ரீஜ­ய­வர்த்­த­ன­புர நக­ரத்தில் 1001 கட்­டில்­களைக் கொண்ட வைத்­தி­சா­லையை ஜப்பான் நிர்­மா­ணித்துக் கொடுத்­தது. இலங்­கையில் இனப்­பி­ரச்­சினை மற்றும் பயங்­க­ர­வாதப் பிரச்­சினை ஏற்­பட்ட காலத்தில் அப்­போது ஜப்­பானின் வெளி­வி­வ­கார அமைச்­ச­ராக இருந்த அபே மற்றும் பிர­த­மா­ராக இருந்த தசேனா ஆகியோர் எமக்கு பல உத­வி­களை செய்­தனர்.
இலங்­கைக்கு ஆத­ரவுவழங்கும் மாநாடு
2001 ஆம் ஆண்டு நான் பிர­த­ம­ராக பத­வி­யேற்ற பின்னர் புலி­க­ளுடன் சமா­தானப் பேச்­சு­வார்த்­தையை நடத்­தினேன். அப்­போது ஜப்பான் பிர­த­ம­ராக இருந்த கைசுமி டோக்­கி­யோவில் இலங்­கைக்கு ஆத­ரவு வழங்கும் நாடு­களில் மாநாட்டை நடத்தி இலங்­கையின் சமா­தான செயற்­பா­டு­களின் இணைத்­த­லைமை நாடு­க­ளாக ஜப்­பா­னையும் முன்­கொண்டு வந்தார்.எனது இம்­முறை ஜப்பான் விஜ­யத்தின் போது இரு­த­ரப்பு ஒத்­து­ழைப்பு கூற்­றொன்றை விடுக்க விரும்­பு­கின்றேன். அர­சியல், பொரு­ளா­தார, தொழில்­நுட்ப , கலா­சாரம் ஆகிய துறை­களில் இரண்டு நாடு­களும் இணைந்து செயற்­பட முடியும். தற்­போ­தைய நிலை­மையில் அமெ­ரிக்கா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடு­களில் பொரு­ளா­தா­ரத்தில் நேர­டி­யான மற்றும் செயற்­பாட்டு ரீதி­யாக இயங்கி வரு­கின்ற நிலையில் ஐரோப்­பிய ஒன்­றி­யமும் ஜப்­பானும் இயல்பு நிலைக்கு திரும்பி வரு­கின்­றன.இந்­தியா, தமது வளர்ச்­சியை பேணக்­கூ­டிய இய­லு­மையை வெளிக்­காட்டி நிற்­கின்­றது. இலங்­கையின் தேசிய அர­சாங்கம் விரை­வான பொரு­ளா­தார வளர்ச்­சிக்­காக தன்னை அர்ப்­ப­ணித்­துள்­ளது. தெற்­கா­சிய பொரு­ளா­தார வளர்ச்­சிக்­கான பின்­ன­ணியை உரு­வாக்­கு­வ­தற்கு ஜப்­பானின் ஆத­ரவு அவ­சி­ய­மாகும். இதற்­காக பல்­வித அனு­கு­மு­றையை மேற்­கொள்­ளவும் இலங்கை ஊடாக இந்­தி­யா­வு­ட­னான ஜப்­பானின் தொடர்­புகள் அதி­க­ரிக்­கப்­ப­ட­வேண்டும்.
தெற்­கா­சிய சனத்­தொகை
இன்று தெற்­கா­சி­யாவின் சனத் தொகை 1.6 பில்­லி­யன்­க­ளாக உள்­ளது. மொத் தேசிய உற்­பத்­தி­யா­னது 2.6 ட்ரில்­லியன் டொல­ராகும். 2050 ஆம் ஆண்­ட­ளவில் தெற்­கா­சி­யாவின் சனத் தொகை 2 பில்­லி­யன்­க­ளா­கவும் அதி­க­ரிக்கும். கிழக்­கா­சி­யாவின் சனத் தொகையும் அதி­க­ரிக்கும். இலங்­கைக்கு கடந்த ஜன­வரி மாதம் புதிய ஜனா­தி­பதி ஒருவர் தெரி­வானார். ஆகஸ்ட் மாதம் புதிய அர­சாங்­கமும் உரு­வா­கி­யது. இன்று எமது நாட்டில் ஜன­நா­ய­கத்தின் அடிப்­ப­டை­யான நல்­லாட்சி வெளிப்­படைத் தன்மை சட்­டத்தை ஆட்­சிப்­ப­டுத்தல் சுயா­தீன நீதிச்­சேவை, ஆகி­யவை முக்­கிய விட­ய­மாக கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வுள்­ளன.
ஜெனி­வாவில் பாராட்டு
ஒக்­டோபர் மாதம் முதலாம் திகதி ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையில் இலங்கை தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் தொடர்­பான பிரே­ரணை ஊடாக இலங்கை அர­சாங்­கத்தின் கொள்கை, மற்றும் செயற்­பா­டுகள் பாராட்­டப்­பட்­டன. தற்­போ­தைய அர­சாங்கம் ஐக்­கிய தேசி­யக்­கட்சி, சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்சி ஆகி­ய­வற்றை கொண்டு அமைக்­கப்­பட்­டுள்­ளது. இலங்­கையின் இரண்டு பெரிய கட்­சி­களும் சம்­பி­ர­தாய அர­சியல் எதிர்ப்பை ஒரு பக்கம் வைத்து விட்டு ஜேர்­ம­னியில் உள்­ளதைப் போன்ற கருத்­தொ­ரு­மை­வாத ஆழ­மான யுக­மொன்­றுக்­காக பய­ணித்­துக்­கொண்­டி­ருக்­கின்­றன. இந்த புதிய முறை­மை­யினால் அர­சியல் ஸ்திரம் , வெளிப்­படைத் தன்மை என்­பன நிறு­வப்­பட்­டுள்­ளன. அமை­தி­யான அர­சியல் சமூகம் ஒன்றை மீண்டும் உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.
புதிய அர­சி­ய­ல­மைப்பு
புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­குதல், மனித உரி­மை­களை உறு­திப்­ப­டுத்­துதல், நிறு­வ­னக்­கட்­ட­மைபை பலப்­ப­டுத்­துதல் என்­பன எமது அர­சியல் நோக்­கங்­களின் பிர­தா­ன­மாக காணப்­ப­டு­கின்­றன. அத்­துடன் தேசிய ஒற்­றுமை மற்றும் மத இனப்­பி­ரச்­சினை தொடர்­பாக விட­யங்­க­ளுக்கு அர­சியல் தீர்­வு­களை தேடு­வதே எமது முக்­கி­ய­மான நோக்­க­மாக அமைந்­துள்­ளது.
கூட்­ட­மைப்­புடன் பேச்சு
தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட ஏனைய அர­சியல் கட்­சி­க­ளுடன் அர­சியல் தீர்­வொன்றைக் காண்­ப­தற்­காக ஏற்­க­னவே நாங்கள் பேச்­சு­வார்த்­தை­களை ஆரம்­பித்து விட்டோம். கடந்த ஐந்து தசாப்­த­கா­ல­மாக இலங்­கையில் மொழி, மற்றும் இனப்­பி­ரச்­சினை முக்­கிய இட­மாக இருந்­த­துடன் கடந்த தசாப்­தத்தில் மதப் பிரச்­சி­னையும் முன்­னுக்கு வந்­தது. அனைத்துப் பிரச்­சி­னை­க­ளுக்கும் மிகவும் பல­மான இலங்கை என்ற அடை­யா­ளத்­துடன் தீர்வு காணப்­படும். அனைத்த மக்­க­ளையும் சம­மாக மதிக்­கக்­கூ­டிய வகை­யி­லான கொள்கை ஒன்றை அனைத்து சமூ­கங்­களும் ஏற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய வகை­யிலும், அனை­வ­ரது பங்­க­ளிப்­பு­டனும் மேற்­கொள்­ள­வேண்டும் என்­பதே எனது நம்­பிக்­கை­யாகும்.பெண்­க­ளுக்கு எதி­ரான அநீ­தி­களை தடுக்கும் வகையில் ஐ.நா.வின் சாசனம் உள்­ள­டக்­கப்­பட்ட சட்­ட­மூலம் ஒன்றை கொண்­டு­வ­ர­வுள்ளோம். தேர்­தல்­களில் தற்­போது பெண்­களின் பிர­தி­நி­தித்­துவம் 10 வீதத்­திற்கும் குறை­வாக உள்­ளது. அதனை 25 வீத­மாக உயர்த்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.
19 ஆவது திருத்தச் சட்டம்
நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­திக்கு காணப்­ப­டு­கின்ற அதி­கா­ரங்கள் 19 திருத்த சட்­டத்தின் ஊடாக வரை­ய­றுக்­கப்­பட்­டன. பாரா­ளு­மன்­றத்தை பலப்­ப­டுத்­து­வ­தற்கு பேச்­சு­வார்த்­தைகள் இடம் பெற்று வரு­கின்­றன. ஐரோப்­பிய பாரா­ளு­மன்றம், அமெ­ரிக்க காங்­கிரஸ், ஜப்­பானின் சட்டப் பேரவை, போன்­ற­வற்­றுக்கு ஒத்த வகையில் பாரா­ளு­மன்ற ஆலோ­ச­னைக்­கு­ழுக்கள் அமைக்­கப்­படும். பாரா­ளு­மன்­றத்தில் வரவு – செலவுத் திட்ட அலு­வ­லகம் ஒன்றும் அமைக்­கப்­படும். ஜே.ஆர். ஜய­வர்த்­தன மன்றம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கான பயிற்சி மற்றும் ஆய்வு நிலை­ய­மாக விரி­வு­ப­டுத்­தப்­படும்.
கூட்­ட­மைப்பு எதிர்க்­கட்­சியில்
பாரா­ளு­மன்­றத்தில் மூன்­றா­வது பெரிய கட்­சி­யாக இருக்­கின்ற தமிழ் தேசி­யக்­கூட்­ட­மைப்­பிற்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. மேலும் மக்கள் விடு­தலை முன்­ன­ணிக்கு எதிர்க்­கட்­சியின் பிர­தமர் கொறடா பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது. இதன் ஊடாக அனைத்து கட்­சி­களும் பாரா­ளு­மன்­றத்­தி­னதும் அர­சாங்­கத்­தி­னதும் செயற்­பா­டு­களில் பங்­க­ளிப்பு செய்ய முடி­யு­மாக உள்­ளது. பாரா­ளு­மன்ற விவா­தங்­களை தொலைக்­காட்­சியில் ஒளி­ப­ரப்­பு­வ­தற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உண்மையை கண்டறியும் ஆணைக்குழு
ஒற்றுமையுடன் சந்தித்து ஒற்றுமையுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஒற்றுமையுடன் கலைந்து செல்லும் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இந்நிலையில் பௌத்த, கிறிஸ்தவ, இந்து, மற்றும் இஸ்லாமிய மதத் தலைவர்களைக் கொண்ட சமாதான ஆலோசனை சபை உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு என்பவற்றை நிருவுவதற்கு தென்னாபிரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
நீதிமன்ற பொறிமுறை
அதுமட்டுமன்றி மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிப்பதற்கு நீதிமன்ற பொறிமுறை யொன்றை உருவாக்கி வருகின்றோம். ஊழலை ஒழிப்பதற்காக புதிய சட்டதிட்டங்களை கொண்டு வருவோம். இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையில் பொருளாதார வேலைத்திட்டங்களை மேற்கொள்வதன் மூலம் இரண்டு நாடுகளுக்கும் நன்மை கிடைக்கும். அத்துடன் பாகிஸ்தான், பங்களாதேஷ், மியன்மார் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளுடனும் வர்த்தக உடன்படிக்கை செய்துகொள்ளப்படவுள்ளன.ஐரோப்பிய ஒன்றியத்துட்ன பேச்சு நடத்த ஜி எஸ்.பி. பிளஸ் சலுகை பெறப்படுவதுடன் சீனாவுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ளவுள்ளோம் என்றார்.

No comments:

Post a Comment