October 7, 2015

இலங்கை அரசைக் கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்ட உண்ணாவிரதம் வாபஸ்!

இலங்கை அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதம் வாபஸ் பெறப்பட்டது.நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட படகை மீட்க இலங்கை அரசு அனுமதி தந்ததால் மீனவர்கள்
அறிவித்துள்ளனர்.இலங்கை படை செப்டம்பர் 26-ல் ஜெபராஜ் என்பவரது படகை ரோந்து படகால் மோதி மூழ்கடித்தது குறிப்பிடத்தக்கது.
மூழ்கடிக்கப்பட்ட படகில் வில்வராஜ் என்பவர் இருந்ததாக சக மீனவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.மாயமான மீனவரை மீட்க கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர். மூழ்கடிக்கப்பட்ட படகை மீட்க அனுமதி மறுத்த இலங்கை அரசை கண்டித்தும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட படகை மீட்க இலங்கை அரசு அனுமதியளித்துள்ளது.கடலில் மூழகிய மீனவரின் மகள் இதுதொடர்பில் கருத்து தெரிவிக்கையில்,“மீன்பிடிக்கப் போன எங்க அப்பா இன்னும் திரும்பவே இல்லை. கலெக்டரிடம் மூன்று முறை சொல்லியும் எந்த நடவடிக்கையும் எடுக்கலே.
மத்திய மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்தள்ளோம் தமிழக முதலமைச்சருக்கு மனுகொடுத்துள்ளோம். ஆனா யாருமே எங்க அப்பாவை தேடிக்கண்டுபிடிக்கலே.எங்கு அப்பா இருக்கும் வரை நானும் எனது அக்காவும் படித்தோம். இனி எங்களை யாரு படிக்கவைப்பா” என கண்ணீருடன் கூறிய தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் செயலாளர் செந்தில் என்பவர் தெரிவிக்கையில்,“நடுக்கடலில் மூழ்கடிக்கப்பட்ட மீனவர் வில்வராஜை மீட்க 12 நாட்களாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.நடவடிக்கையும் எடுப்பதில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.மீனவரை தேடிக்கண்டுபிடித்துதர வலியுறுத்தி இன்று 5 வது நாளாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.
இதனால் சுமார் 20 ஆயிரத்திற்குக்கும் மேற்ப்பட்ட மீன்பிடி தொழிலாள்கள் வேலையிழந்து பாதிக்கப்பட்டுவருவதாகவும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பஙகளோடு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஐந்தாவது நாளாக தொடரும் வேலை நிறுத்தப் போராட்டத்தால் 800 படகுகள் கரையில் நங்கூரமிட்டுள்ளதால், ஐந்து ஆயிரம் மீன்பிடி தொழிலாளர்களும் சுமார் 25 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்;களும் வேலையிழந்துள்ளதோடு, சார்பு நிறுவனங்களும் பூட்டப்பட்டுள்ளதால் 10 கோடி கோடி வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment