October 6, 2015

கிளிநொச்சி இரணைமடு சேற்றில் உலாவித் திரிந்த மைத்திரி பால சிறிசேன (படங்கள் இணைப்பு)

கிளிநொச்சிக்கு  திங்கள் கிழமை விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைதிரி பால சிறிசேன இரனைமடு நீா்ப்பாசன குளத்தின் கீழ் மருதநகா் பகுதியில் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் 2016௨018 நிகழ்வினை உத்தியோகபுா்வமாக ஆரம்பித்து வைத்தார்.

நேற்று திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு என நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கபட்டிருந்த போதும் காலை 09.50 மணிக்கு கிளிநொச்சியை சென்றடைந்த சனாதிபதி மேற்படி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்ததோடு கிளிநொச்சி இரனைமடு நன்னீா் மீன்வளா்ப்புத் திட்டத்தினையும் சம்பிரதாயபூா்வமாக பெயா் பலகை திரை நீக்கம் செய்து வைத்ததுடன். மின்குஞ்சுகளையும் வளா்பபுத் திட்டத்திற்காக விட்டார். அத்துடன் கிளிநொச்சி அறிவியல் நகா் பகுதியில் அமைக்கப்பட்டு வருகின்ற இலங்கை ஜோ்மன் தொழிநுட்ப பயிற்சி நிலையத்தினையும் பார்வையிட்டுள்ளார்.


No comments:

Post a Comment