October 9, 2015

பாலியல் வன்புணர்வு தொடர்பான வழக்கு ஒன்று இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ள “வான்”!

விஸ்வமடுவில் இராணுவத்தினரின் பாலியல் வன்புணர்வு சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வரவேற்றுள்ள பெண்கள் அமைப்பு ஒன்று, மன்னாரில் 2001ம் ஆண்டு இடம்பெற்ற பாலியல்
வன்புணர்வு தொடர்பான வழக்கு இன்னும் தீர்க்கப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. வடக்கை மையமாகக் கொண்டு இயங்கும் 8 பெண்கள் அமைப்புக்களின் கூட்டமைப்பான “வான்” இது தொடர்பில் ஜனாதிபதியிடம் முறைப்பாட்டை செய்துள்ளது.
2001ஆம் ஆண்டு மார்ச் 19ஆம் திகதி மன்னாரில் இரண்டு தாய்மார் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் மூன்று பொலிஸ் அலுவலர்களும் 9 கடற்படையினரும் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு 2006ஆம் ஆண்டு அநுரதபுர மேல்நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்பின்னர் 2008ம் ஆண்டு பாதிக்கப்பட்டவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழக்கு விசாரணையை நிறுத்தியது. அதேநேரம் மற்றும் ஒரு பெண்ணும் பாதுகாப்பு கருதி நாட்டை விட்டு தப்பிச்சென்றார். இந்தநிலையில் குறித்த வழக்கை விசாரணை செய்ய ஜனாதிபதி விசேட பொறிமுறையை அமைக்கவேண்டும் என்று பெண்கள் அமைப்பு கோரியுள்ளது.

No comments:

Post a Comment