October 9, 2015

யாழில் கடைவிரிக்கும் இந்திய தொழில் நிறுவனங்கள்!

யாழ். மாவட்டத்தில் வர்த்தக நடவடிக்கைகளை விஸ்தரிக்க இந்திய கடைவிரிக்கவுள்ளது.அவ்வகையினில் இந்திய வர்த்தகத்தினை மேம்படுத்துவதற்கான விசேட மாநாடு ஒன்று இலங்கைக்கான இந்திய
துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழில் இன்று நடைபெற்றுள்ளது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக, இந்தியாவைச் சேர்ந்த இளம் வர்த்தகர்கள் 44 பேர் யாழிற்கு வருகை தந்திருந்தனர்.இந்த மாநாட்டில், ,இங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் நடராஜா, பிரதி தூதுவர் எம்.மூர்த்தி எனப்பலர் கலந்து கொண்டிருந்தனர்.தமது இலக்காக யாழினில் வியாபாரத்தின் மூலம் 1000 கோடி ரூபா எட்டவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
எமது இந்திய தேசம் வர்த்தகத்திலும் சரி,பொருளாதாரத்திலும் வேகமாக உயர்ந்து சென்றாலும் எமது அண்டை நாடான இலங்கையும் முன்னேற வேண்டும். இலங்கை குறிப்பாக வட-கிழக்கு மாகாணம் நீண்ட போரிற்குப் பின்னர் மக்கள் அமைதியான,சுமூகமான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
அவர்களுக்கு நாமும் ஒத்துழைப்பு வழங்கி பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தால் மாகாணம் வளர்ச்சியடையும். எனவே இலங்கை உயர்வு நம் உயர்வு என்று சிந்தித்தால் இந்த பிராந்தியம் மென்மேலும் வளர்ச்சியடையும் என தெரிவித்துள்ளார் இந்திய துணைத்தூதுவர் நடராஜா. இந்தியாவினில் 40 சதவீத மக்கள் இன்று வரை அடிப்படை மலசலகூட வசதிகள் கூட இன்றி வாழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment