சுன்னாகம் பொலிஸார் நேற்றுமுன்தினம் புதன்கிழமை இரவு மேற்க் கொண்ட ரோந்து நடவடிக்கையின் போது பலவேறு குற்றச் செயல்களுடனும் தொடர்புடையவர்கள் எனக் கருதப்படும் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.
சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துஸ்மந்த தலைமையில் சென்ற பொலிஸ் குழுவினர் ஏழாலை பகுதியில் மது போதையில் பொது மக்களுக்கு இடையூறாக நடந்து கொண்ட நான்கு பேரையும் மற்றும் சந்தேகத்தின் பெயரில் நான்கு பேரையும் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட இருவரையும் மற்றும் மதுபோதையில் வாகனம் செலுத்திய நான்கு பேரையும் கைது செய்துள்ளார்கள்.கைது செய்யப்பட்ட இவர்கள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சுன்னாகம் பொலிஸ் பிரிவினுள் கடந்த சில நாள்களாக இடம்பெற்ற விரும்பத்தகாத சம்பவங்களைக் கட்டுப்படுத்தும் வகையில் இரவு நேர ரோந்து நடவடிக்கைகளை பொலிஸார் அதிகரித்துள்ள நிலையில் இத்தகையவர்களும் கைது செய்யப்படுவதால் பொமக்கள் எதிர்கொண்ட அசௌகரியங்கள் ஓரளவுக்குக் குறைவடைந்துவருவதாக பொது மக்கள் கருத்துத் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment