October 9, 2015

யாழ். மத்திய கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி!

யாழ்ப்பாணம் மத்தியக் கல்லூரியின் 200ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடை பவனி இன்று நடைபெற்றது.கல்லூரியின் ஆண்டு நிறைவை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்ற நிலையில், அதன் ஒரு கட்டமாக நடை பவனி இடம்பெற்றது.



குறித்த நடை பவனியினை இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் நடராஜா ஆரம்பித்து வைத்தார். யாழ். மத்தியக் கல்லூரி வளாகத்திலிருந்து நடைபவனி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த நடை பவனியில் தமிழ் மக்களின் கலாசாரங்களை வெளிப்படுத்தும் வகையில் நடனங்களும் இடம்பெற்றிருந்தன.

நடைபவனியில், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர் எனப் பெருந்திரளானோர் கலந்துக் கொண்டிருந்தனர்.

No comments:

Post a Comment