October 9, 2015

ரவிராஜ் படுகொலை முக்கிய சூத்திரதாரியை கைதுசெய்ய சர்வதேச பொலிஸாரின் உதவி நாடப்பட்டுள்ளது!

முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் படுகொலை தொடர்பான முக்கிய சூத்திரதாரியான சரண் என்ற நபரை கைதுசெய்வதற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் சர்வதேச பொலிஸாரின் உதவியை நாடியுள்ளனர்.

சரண் என்ற அந்த நபர் தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சம் புகுந்துள்ளார்,அந்த நாடு குறிப்பிட்ட நபரை இலங்கையிடம் ஓப்படைப்பதற்கு நீதிமன்றத்தின் உத்தரவு அவசியம் குற்றப்புலனாய்வு திணைக்கள  உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
சரண் என்ற குறிப்பிட்ட சந்தேகநபரிற்கு நிரந்தர முகவரி எதுவும் இல்லாததால் இது தொடர்பான அனைத்து விடயங்களிற்கும் சர்வதேச பொலிஸாரின் உதவி தேவைப்படுகின்றது,

ரவிராஜ் மற்றும்பிரகீத்தின் படுகொலைகளிற்கு பி;ன்னாள் புலனாய்வுதுறையினர் உள்ளதும் உறுதியாகியுள்ளது,ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட காணமற்போன சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட கேர்ணல் தர இராணுவஅதிகாரிக்கு ரவிராஜ் கொலையுடன் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது எனவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் குறிப்பி;ட்டுள்ளனர்.

No comments:

Post a Comment