யாழ்.மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் சிங்கள மற்றும் முஸ்லிம் மக்களின் சனத்தொகையில் அதிகளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ள அதேவேளை தமிழ் மக்களின் சனத்தொகை குறைவடைந்துள்ளதாக யாழ்.மாவட்டச்
செயலக புள்ளிவிவரக் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் சிங்களக் குடும்பங்களின் எண்ணிக்கை 107 இனாலும், முஸ்லிம் மக்களின் எண்ணிக்கை ஆயிரத்து 198 இனாலும் அதிகரித்துள்ள நிலையில் தமிழ் மக்களின் எண்ணிக்கை, 2 ஆயிரத்து 114 குடும்பங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.
2010ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் ஒரு லட்சத்து 88 ஆயிரத்து 501 குடும்பங்களைச் சேர்ந்த 6 லட்சத்து 11 ஆயிரத்து 56 தமிழர்களும், 981 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 264 முஸ்லிம்களும், 12 குடும்பங்களைச் சேர்ந்த 19 சிங்களவர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டது. எனினும் 2014ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தமிழர்களின் எண்ணிக்கை, 2 ஆயிரத்து 114 குடும்பங்களினால் குறைவடைந்து ஒரு லட்சத்து 86 ஆயிரத்து 387 குடும்பங்களைச் சேர்ந்த 6 லட்சத்து 5 ஆயிரத்து 224 பேர் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை சிங்களவர்களின் எண்ணிக்கை 107 குடும்பங்களால் அதிகரித்து 119 குடும்பங்களைச் சேர்ந்த 373 பேர் வசிக்கின்றனர் என்றும் முஸ்லிம்களின் எண்ணிக்கை ஆயிரத்து 198 இனால் அதிகரித்து, 2 ஆயிரத்து 179 குடும்பங்களைச் சேர்ந்த 8 ஆயிரத்து 944 பேர் வசிக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்களக் குடும்பங்கள் யாழ். மாவட்டத்தின் 10 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிப்பதாக பதிவுசெய்யப்பட்டுள்ளது.
வேலணை மற்றும் தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 2 குடும்பங்களும், ஊர்காவற்றுறை பிரதேசத்தில் 5 குடும்பங்களும், யாழ்ப்பாணம், சண்டிலிப்பாய், சங்கானை, கரவெட்டி பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா 4 குடும்பங்களும், நல்லூர் பிரதேச செயலாளர் பிரிவில் 17 குடும்பங்களும், பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 3 குடும்பங்களும், சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவில் 74 குடும்பங்களும் வசிப்பதாக மாவட்ட செயலக புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment