October 9, 2015

விடுதலைப் புலிகள் நிர்வாகம் செய்த காலங்களில் பாலியல் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை – என்.வீ. சுப்ரமணியம்.!

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களை நிர்வாகம் செய்த காலங்களில் பாலியல் குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை என மாகாண மீனவர் கூட்டமைப்பின் செயலாளர் என்.வீ. சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.


தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கு கிழக்கு மாகாணங்களை நிர்வாகம் செய்த காலங்களில் பாலியல் வன்கொடுமைகள், துஸ்பிரயோகங்கள் உள்ளிட்ட குற்றச் செயல்கள் எதுவும் இடம்பெறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை பார்க்கும் போது, மக்கள் பீதியடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எங்களது பிள்ளைகள் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகும் நிலைமை பெரும் கவலையை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் மட்டுமன்றி தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திலும் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment