October 8, 2015

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர், மற்றூம் கஜன் மாமா கைது!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உப தலைவரும் முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பாக மட்டக்களப்பு மாநகரசபையின் முன்னாள் பிரதி மேயரும் தமிழ்
மக்கள் விடுதலைப் புலிகள் கட்சின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான பிரதீப் மாஸ்டர் என்று அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்தராஜா, மற்றும் கஜன் மாமா எனப்படும், ரெங்கசாமி கனகநாயகம் ஆகிய இருவரும் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

2005 ஆம் ஆண்டு டிசெம்பர் 25 ஆம் திகதி மட்டக்களப்பு மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார்.


இந்தப் படுகொலை இடம்பெற்று 10 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் படுகொலையுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவரை இரகசிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

No comments:

Post a Comment