September 9, 2015

மலை­யக மக்கள் முன்­ன­ணிக்கு எதி­ராக தான் சட்ட நட­வ­டிக்கை எடுப்பேன்- சாந்தினி சந்­தி­ர­சே­கரன் !

மலை­யக மக்கள் முன்­ன­ணிக்கு எதி­ராக தான் சட்ட நட­வ­டிக்கை எடுக்கப் போவ­தாக சாந்தினி சந்­தி­ர­சே­கரன் தெரி­வித்­துள்ளார். நேற்றுகூடிய மலை­யக மக்கள் முன்­ன­ணியின் மத்­திய குழுஅந்தக் கட்­சியின்
தலை­வ­ராக பாரா­ளு­மன்ற உறுப்­பினர் இரா­த­கி­ருஷ்­ணனை தெரிவு செய்­தது.இது தொடர்­பாக அந்தக் கட்­சியின் முன்னாள் தலை­வரும் மலை­யக மக்கள் முன்­ன­ணியின் ஸ்தாப­கத்­த­லைவர் சந்­தி­ர­சே­க­ரனின் மனை­வி­யு­மான சாந்­தனி சந்­தி­ர­சே­க­ர­னிடம் வின­வி­யபோதுஇரா­தா­கி­ருஷ்ண­னிற்கு தலைவர் பத­வியை கொடுத்தால் தனக்கு செய­லாளர் பத­வி­யையோ அல்­லது அதற்கு நிக­ரான ஒரு பத­வி­யையோ தரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டது.இத­னா­லேயே கட்சித் தலை­வ­ராக இரா­த­கி­ருஷ்­ணனை நிய­மிக்க அனு­ம­தித்தேன். என்­றாலும் அவர்கள் கூறி­யது போல் எனக்கு கட்­சியில் எந்த முக்­கிய பத­வி­களும் வழங்­கப்­ப­டவில்லை.
நேற்று நடை­பெற்ற மத்­திய குழுக்­கூட்­டத்தில் தான் பங்­கேற்­றி­ருந்த போதிலும், அனே­க­மான உறுப்­பி­னர்கள் கலந்துகொண்­டி­ருக்­க­வில்லை.இந்த நிலை­யி­லேயே அவர்கள் இவ்­வா­றா­ன­தொரு தீர்மானத்தை மேற்கொண்டனர்.ஆகவே இந்த தீர்மானத்திற்கு எதிராக தான் சட்டநடவடிக்கை எடுக்கப் போவதாக சாந்தனி சந்திரசேகரன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment