தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து விலகிய குடும்பஸ்தர் ஒருவரை கொழும்பிலிருந்து வந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கச்சாய் தெற்கு கொடிகாமத்தை சேர்ந்த மார்க்கண்டு நேவிநாதன் (வயது-42) எனும் குடும்பஸ்தரே கைது
செய்யப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் இறுதிக்கட்ட யுத்தத்திற்கு முன்னதாக வன்னியில் வசித்து வந்துள்ளார். 1997 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். பின்பு குறித்த காலத்தின் பின்னர் புலிகள் இயக்கத்திலிருந்து விலகி திருமணம் முடித்துள்ளார்.
பின்பு இருத்திக்கட்ட போரின் பின்னர் குடும்பத்துடன் யாழிற்கு வந்து கச்சாயில் வசித்து வந்துள்ளார். நான்கு பிள்ளைகளுடைய குறித்து குடும்பஸ்தருக்கு ஒரு கைக்குழந்தையும் உள்ளது. கடற்தொழிலை மேற்கொண்டு வரும் அவர் தற்போது ஏன் கைது செய்யப்பாட்டார் என்பது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்று முன்தினம் பிரஸ்தாப குடும்பஸ்தரின் வீட்டிற்கு வந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் அவரை கைது செய்த பின்னர் வீட்டாரிடம் கைது செய்யப்பட்டமைக்கான துண்டொன்றினையும் கொடுத்துள்ளனர். அதில் நான்காம் மாடிக்கு அழைத்து செல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை நேற்று காலை குறித்த குடும்பஸ்தரின் வீட்டிற்கு வந்த பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பு நான்காம் மாடிக்கு வருகை தந்தால் அவரை பார்க்க முடியும் என கூறி சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment