இணக்க அரசியல் ஊடாக எதிர்க்கட்சி தலைமைப் பொறுப்பையும் குழுக்களின் தலைமைப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க முன்வந்ததையிட்டு மிகவும்
மகிழ்ச்சியடைகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
மகிழ்ச்சியடைகிறேன் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வரலாறு எம்மை விடுதலை செய்திருக்கின்றது. சர்வதேச விசாரணை என்பது வெறும் தேர்தல் கோசமாக இருந்து விடக் கூடாது.
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பலமான வாழ்வாதாரம், நில மீட்பு, மீள் குடியேற்றம், வீட்டுத்திட்டம், அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு, காணாமல் போனவர்களை கண்டுபிடித்தல், வேலைவாய்ப்பு போன்றவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment