யாழ்ப்பாணம் கொட்டடி மீனாட்சி அம்மன் கோவிலடி பகுதியில் வசிக்கும் சிறுமி ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். குறித்த பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியே இவ்வாறு
உடம்பில் மண்ணெண்னை ஊற்றிக் கொண்டு தீக்குளித்துள்ளதாக தெரியவருகின்றது.
தனது தாயுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டை அடுத்து இந்த தற்கொலை முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் யாழ். பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment