August 12, 2014

சிறைச்சாலையில் பெண்களின் ஆடைகளை களைந்தது அம்பலமானது!

சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பெண் சந்தேகநபரின் ஆடைகளை
சிறைச்சாலைகள் அதிகாரி (பெண்) அல்லாத சிலர், களைந்து சோதனைக்கு உட்படுத்தியுள்ளதாக சட்டத்தரணி குணரத்ன வன்னிநாயக்க, கொழும்பு மேலதிக நீதவான் ஏ.எம்.சஹாப்தீனிடம் முறையிட்டார்.
பம்பலப்பிட்டியில் மசாஜ் நிறுவனத்தில் விபசார தொழில் ஈடுபட்டதாக கூறப்படும் தாய்லாந்து பெண்கள் உட்பட 14 பெண்களுக்காக நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்திய போதே அவர் மேற்கண்டவாறு முறையிட்டார்.
அந்த 14 பெண்களும் மசாஜ் நிறுவனத்தின் உறுப்பினர்கள் என்றும் சட்டத்தரணி தெரிவித்தார்.
சட்டத்தரணி முறையிட்டதையடுத்து, நீதிமன்றிலிருந்த சிறைச்சாலை அதிகாரிகளை (பெண்) பார்த்த நீதவான், சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர்களான பெண்களின் ஆடைகளை களைந்து சோதனைக்கு உட்படுத்தினீர்களா என்று வினவினார்.
கடமையிலிருந்த இராணுவ அதிகாரிகளே, சந்தேகநபர்களான பெண்களின் ஆடைகளை களைந்து சோதனை செய்ததாக சிறைச்சாலை அதிகாரிகள் (பெண்கள்) தெரிவித்தனர்.
இந்நிலையில், நீதிமன்றத்தில் பிரசன்னமாயிருந்த பம்பலப்பிட்டி பொலிஸார், மசாஜ் நிறுவனம் என்ற போர்வையில் அங்கு விபசாரமே நடத்தப்பட்டதாக நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

No comments:

Post a Comment