August 12, 2014

வெளிநாட்டு நிறுவனங்கள் மீதும் புலனாய்வு!

நான்கு அரசசார்பற்ற அமைப்புகளின் செயற்பாடுகளை தாங்கள் கண்காணித்து வருவதாக பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் அரசாhபற்ற அமைப்புகளுக்கான தேசிய செயலகம்
தெரிவித்துள்ளது. செயலகத்தின் செயலாளர் சமன் திஸநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
“நான்கு அரசசார்பற்ற அமைப்புகள் குறித்து நாங்கள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளோம் விசாரணைகள் முடிவடைந்ததும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்போம்” எனத் தெரிவித்துள்ள அவர் கடந்த காலங்களில் சில அரசசார்பற்ற அமைப்புகள் தடை செய்யப்பட்டதையும் நினைவுபடுத்தி உள்ளார்.  நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்பு இலங்கையில் இயங்கி வரும் நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பில் கண்காணிப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கி வரும் தன்னார்வ தொண்டு நிறுவன செயலகம் இவ்வாறு கண்காணி;ப்புப் பணிகளை மேற்கொள்ள உள்ளது. வருடாந்த அறிக்கை மற்றும் வருடாந்த திட்ட அறிக்கை ஆகியனவற்றை குறித்த நான்கு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் சமர்ப்பிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உரிய நோக்கங்களுக்கு புறம்பாக செயற்பட்டு வரும் நிறுவனங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவன செயலகத்தின் பணிப்பாளர் சமான் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
விசாரணைகள் பூர்த்தியானதன் பின்னர் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார். தன்னார்வ தொண்டு நிறுவனங்களை முறைமை படுத்தும் நோக்கில் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment