August 12, 2014

தமிழ் மாணவர்களின் மண்டையில் தொழில் பழகும் சிறிலங்காப் படையினர்!

மட்டக்களப்பு பெரியவெட்டுவான் பகுதியிலுள்ள பாடாசலைக்குச் சென்ற சிறிலங்காப் படையினர் அங்குள்ள மாணவர்களை வலுக்கட்டாயமாக அழைத்து முடிவெட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.


இதனால் அச்சமடைந்த சிறார்கள் அழுது கொண்டே பாடசாலையை விட்டு வெளியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாணவர்களின் கற்றல் செயல்பாடும் பாதிக்கப்பட்டது

சிறிலங்காப் படைகளின் 23 வது டிவிசனின் 2 பிரிகேட் படையினரே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்காலத்தில் குறித்த படைப்பிரிவினர் முடிவெட்டும் தொழிலில் ஈடுபடுத்தப்படலாம் என நம்பப்படுகின்றது.

No comments:

Post a Comment