August 12, 2014

நோர்வேயிலிருந்து யாழ்.சென்ற குடும்பத்துக்கு கொழும்பில் நடந்த பாரிய சோகம்

திரு­ம­ணத்­திற்­காக நோர்­வே­யி­லி­ருந்து வருகை தந்த குடும்பம் தங்­கி­யி­ருந்த வெள்ள­வத்­தையில் உள்ள
வீடொன்றில் 60 இலட்சம் ரூபா­வுக்கு அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய பணம் மற்றும் நகைகள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. இந்தச் சம்­பவம் வெள்ள­வத்தை பீற்­றர்சன் ஒழுங்­கையில் உள்ள தொடர்­மா­டி வீடொன்றில் நேற்று முன்­தினம் நள்­ளி­ர­வுக்குப் பின்னர் இடம்­பெற்­றுள்­ள­து.
எதிர்­வரும் 20 ஆம் திகதி யாழ்ப்­பா­ணத்தில் திரு­மணம் இடம்­பெ­ற­வுள்­ள­மை­யினால் நோர்­­வேயில் உள்ள மாப்­பிள்­ளையும் குடும்­ப­த்­தி­ன­ரு­மாக 13 பேர் கடந்த வாரம் இலங்கை வந்­துள்­ளனர். இவர்­களில் ஒரு பகு­தி­யினர் யாழ்ப் பாணம் சென்ற நிலையில் மாப்­பிள்­ளையின் சகோ­த­ரனும் அவ­ரது மனை­வியும் பிள்­ளையும் குறித்த வீட்டில் தங்­கி­யி­ருந்த சம­யமே இந்த கொள்ளைச் சம்­பவம் இடம்­­பெற்­றுள்­ளது.
திரு­மணத்திற்­கா­க சேக­ரித்து வைக்­கப்­பட்­டி­ருந்த தங்க நகை­க­ளும் நோர்வே நாண­ய­மாக வைக்­கப்­பட்­டி­ருந்த 30 இலட்சம் வரை­யான பண­மு­மே கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன. மிக சூட்­சு­ம­மான முறையில் நான்கு மாடிகள் ஏறி­வந்து வீட்டின் குளி­ய­லறை ஜன்னல் ஊடாக உள்­நு­ழைந்து இந்த கொள்ளை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது.
வெள்­ள­வத்தை பீற்­றர்சன் லேனில் 70/18 என்ற இலக்­கத்தில் ஆறு மாடி­களைக் கொண்ட குடி­யி­ருப்புத் தொகுதி உள்­ளது. குறித்த தொடர்மாடி குடி­யி­ருப்புத் தொகு­தியின் நான்காம் மாடியில் உள்ள ஒரு வீட்டில் நோர்­வே­யி­லி­ருந்து வருகை தந்­தி­ருந்த தமிழ் தம்­ப­தி­யினர் தங்­கி­யி­ருந்­தனர்.
நேற்று முன்­தினம் இரவு 12 மணி­ய­ளவில் வீட்­டி­லி­ருந்த மூவரும் வீட்டின் வலது புற­முள்ள தமது அறையில் நித்­தி­ரைக்கு சென்­றுள்­ளனர். குறித்த அறை குளி­ரூட்­டப்­பட்­டி­ருந்­ததால் அறைக் கதவு இலே­சாக மூடப்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் நேற்று அதி­காலை சுமார் 4 மணி­ய­ளவில் நித்­தி­ரை­யி­லி­ருந்த எழுந்த மனை­விக்­கு சத்தம் கேட்­டுள்­ளது. இத­னை­ய­டுத்து விழித்துக் கொண்­டுள்ள அவர் வெளியே மழை பெய்­வ­தாக நினைத்து மீண்டும் நித்­தி­ரைக்கு செல்ல முற்­பட்ட போது மூடப்­பட்­டி­ருந்த அறைக் கதவு மெல்ல திறக்­கப்­பட்டு டோர்ச் ஒன்­றி­னூ­டாக ஒளி பாய்ச்­சப்­பட்­டது.
நபர் ஒருவர் தமது அறைக்குள் டோர்ச் ஊடாக ஒளி பாய்ச்­சு­வதை அவ­தா­னித்­துள்ள குறித்த யுவதி திருடன் திருடன் என சத்­த­மிட்­டதை அடுத்து குறித்த நபர் வீட்டின் இடது புற அறையின் ஜன்னல் வழி­யாக குதித்து தப்பிச் சென்­றுள்ளார்.
சம்­பவம் தொடர்பில் வெள்­ள­வத்தை பொலி­ஸா­ருக்கு தகவல் அளிக்­கப்­பட்­டதை அடுத்து பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் உத­ய­கு­மார வுட்லர் தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வினர் ஸ்தலத்­துக்கு சென்று தட­யங்­களை சேக­ரித்து விசா­ர­ணை­களை ஆரம்­பித்­துள்­ளனர்.
நான்காம் மாடியின் பின்­பக்­க­மாக வந்­துள்ள திருடன் அந்த வீட்டின் குளி­ய­லறை ஜன்­னலை திறந்து துவாய் ஒன்றை அதன் கட்­டுக்­களில் விரித்து உடல் காயங்கள் ஏற்­படா வண்ணம் உள்­நு­ழைந்­துள்ளான்.
குளி­ய­ல­றையின் வலப்­பக்­க­மாக உள்ள அறை­யினுள் நுழைந்து அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்த அலு­மா­ரியை உடைத்து அதி­லி­ருந்த தங்க நகைகள் மற்றும் வெளி­நாட்டு நாண­யங்­களை கொள்­ளை­யிட்­டுள்ளான். எனினும் அந்த அறை­யி­லி­ருந்து புதிய கைய­டக்க தொலை­பேசி, மடிக் கணனி, வீட்டின் பிர­தான அறை­யி­லி­ருந்த இலத்­தி­ர­னியல் பொருட்கள் என்­பவை கொள்­ளை­யி­டப்­ப­ட­வில்லை. சுமார் 50 இலட்­சம் ரூபா­வுக்­கு அதி­க­மான தங்க நகை பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ள­தாக வீட்­டு­ரி­மை­யா­ளர்கள் குறிப்­பிட்­டனர்.
ஸ்தலத்­துக்கு பொலிஸ் மோப்ப நாய்கள் வர­வ­ழைக்­கப்­பட்டு விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்ட நிலையில் கை ரேகை தட­வியல் நிபு­ணர்­களும் வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இத­னை­ய­டுத்து நேற்று மாலை வரை பொலிஸார் மேற்­கொண்ட விசா­ர­ணை­களில் ஒரு­வரை சந்­தே­கத்தின் பேரில் கைது செய்து விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தி­யுள்­ள­தாக வெள்­ள­வத்தை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி சிரேஷ்ட பொலிஸ் பரி­சோ­தகர் உதய குமார வுட்லர் கேசரியிடம் குறிப்பிட்டார். விசாரணைகள் தொடரும் நிலையில் மிக விரைவில் சந்தேக நபர்களை கைது செய்ய எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்த சம்பவம் குறித்து வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரின் நேரடி கண்காணிப்பின் கீழ் அப் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவு விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.Norva-FamileNorva-Famile-01

No comments:

Post a Comment