August 12, 2014

சிறீலங்கா அரசின் இனப்படுகொலையினை நிரூபித்து நாங்கள் தமிழராக நிற்போம் -கஜன்!


 இது ஒரு இறுதி கட்டம் இதில் சோர்ந்து போவோமாக இருந்தால் நாங்கள் அழிந்து போயிடுவோம் அனைத்து தமிழ்மக்களின் ஐ.நாவின் விசாணைக்கழுவில் சாட்சியம்
சொல்லவேண்டும் என்று மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய தொலைக்காட்சியின் நிலவரம் நிகழ்ச்சிக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
உலகத்தில் பரந்துவாழும் தமிழ் மக்கள் ஐ.நா விசாரணைகுழுவின் முன்னிலையில் சாட்சி தெரிவிப்பதன் ஊடாக போர்குற்றம் புரிந்த இனப்படுகொலை செய்த சிறீலங்கா அரசினை குற்றவாளி கூண்டில் ஏற்றி தண்டிக்க முடியும்,சாட்சியம் சொல்லும் மக்களுக்கு ஐ.நா பாதுகாப்பு கொடுக்கும் அனைத்து தகவல்களும் பாதுகக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தாயத்தில் இருக்கும் மக்கள் அனைவுரும் தங்கள் தங்கள் பிரச்சனைகளை ஐ.நாவிற்கு தெரிவிக்க வேண்டும்.
எங்கள் இனம் அழியும் போது ஒரு நாடுகூட வரவில்லை இன்று ஒரு உயிர் அழியும் போது ஓடிப்பாயும் உலகம் இன்று தமிழர்களிடத்தில் கணக்கு கேட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள் இதுவர்கள் பிளை விட்டதை உணர்ந்துகொள்கின்றார்கள்.
எனவே அன்பார்ந்த மக்களிடம் நான் கேட்பது 2009 எங்கள் உறவுகளை அழியவிட்டு விட்டு விட்டு இன்றும் துடிதுடித்துக்கொண்டிருக்கின்றோம் இது ஒரு இறுதி சந்தர்ப்பம் அனைவரும் ஒன்று சோ்ந்து உங்களுக்கு நடந்த சம்பவம் உங்கள் உறவுகளுக்கு நடந்த சம்பவம் உங்கள் நிலத்தில் படையினர் இருந்தாலும் அதுதொடர்பில் ஐ.நாவிற்கு எழுத்து மூலம் தெரியபடுத்துங்கள் உறவுகளே கைவிட்டுவிடாதீர்கள் இதனை கைவிட்டால் இனி ஒரு சந்தர்ப்பம் கிடைக்காது..
இது இறுதி சந்தர்ப்பம் உலகம் கொடுத்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்ளவேண்டும்.
ஆயிரக்கணக்கான மக்களின் இழப்புக்கள் அனைத்து புலம்பெயர் நாட்டில் இருக்கும் மக்களின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் இருக்கின்ற மக்களும் தமிழீழ விடுதலையினை பெற இணைந்து உழைக்கவேண்டும் இது ஒரு இறுதி கட்டம் இதில் சோர்ந்து போவோமாக இருந்தால் நாங்கள் அழிந்து போயிடுவோம் என்றும் பிரான்சில் இருக்கும் மனிதநேய செயற்பாட்டாளர் கஜன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment