தேச நலனுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது என்று எங்களுக்கு தோன்றினால் கண்டிப்பாக நாங்கள் அதை எதிர்ப்போம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமாகிய எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர்,எங்களுடைய கட்சியின் தலைவர் சம்பந்தன் எதிர்கட்சி தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது வரலாற்று முக்கியதுவம் வாய்ந்த ஒரு நாளாகும்.
அவர் எதிர்கட்சி தலைவராக தனது பணியை சிறப்பாக செய்ய எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர் எதிர்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
கடந்த 1977 ஆம் ஆண்டு யூலை மாதம் அமிர்தலிங்கம் எதிர்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
தேர்தலில் அதிக வாக்குகள் பெற்ற கட்சியும் இரண்டாவது அதிக வாக்குகள் பெற்ற கட்சியும் ஒன்று சேர்ந்துள்ளனர். இது நாட்டுக்கும், இந்த சபைக்கும் நல்லதாகும்.
பாராளுமன்றத்தின் இருபக்கங்களிலும் உள்ளவர்கள் தமிழர்கள் தொடர்பான கேள்வி நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று தெரிவித்திருப்பதை நான் வரவேற்கின்றேன். நாம் வெளிப்படை தன்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றவேண்டும்.
தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட நியதிகள் குறித்து பேச எங்கள் கட்சி ஆர்வமாக உள்ளது. அதே வேளையின் நாட்டின் பிற பகுதிகளில் உள்ளவர்கள் இந்த சம்பவத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பது குறித்து சிந்தித்துப் பார்க்கவேண்டும் என்று நாங்கள் வாதிடுகிறேம்.
தேசத்தின் பிரச்சினைகளை பற்றி பேச ஒன்றுபட்ட அரசாங்கத்தை உருவாக்க வேண்டும் என்பது நல்ல விடயம் தான். ஆனால் எதற்காக அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும்.
ஒருவேளை பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் அரசாங்கத்தின் உண்ணத செயல்களில் பங்குபெறவேண்டுமென்றால் அவர்கள் தாராளமாக பாராளுமன்றத்தில் இருந்து தங்கள் ஒத்துழைப்பை தரலாம்.
ஆனால் அதற்காக அமைச்சராகவோ, இணை அமைச்சராகவோ பதவி வகிக்கவேண்டும் என்று அவசியமில்லை. இது அவசியமானது என்று நினைக்கும் கலாச்சாரம் தெற்கு மாகாண உறுப்பினர்களின் புகழை கீழ் நோக்கி இழுத்து செல்லும்.
உடனடியாக சீர் செய்யவேண்டும் என்றும் நாங்கள் நினைக்கும் பிரச்சினைகளை இன்னும் 2 ஆண்டுகளுக்குள் சரி செய்யவேண்டும்.
இந்த நாடு சரியான பாதையில் செல்வதற்கு நாம் இன்னும் கடினமாக உழைக்கவேண்டும். தேச நலனுக்கு எதிராக இந்த அரசு செயல்படுகிறது என்று எங்களுக்கு தோன்றினால் கண்டிப்பாக நாங்கள் அதை எதிர்ப்போம்.
அதேவேளையில் நாட்டின் முன்னேற்றத்துக்காக இந்த அரசு எடுக்கும் முடிவுகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் உண்டு. பலதரப்பட மக்களையும் ஒன்றினைத்து ஒரே மக்கள் என்று அடையாளப்படுத்த முயற்சி எடுத்தால் நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்தார்.
No comments:
Post a Comment