அமெரிக்காவைச் சேர்ந்த பேஸ்புக் (முகநூல்) சமூக வலைத்தள நிறுவனம் உலகிலேயே
மிகப் பெரிய சமூக ஊடக நிறுவனமாக திகழ்கிறது. 2004ம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வந்த இந்த ஊடகத்திற்கு 2013 டிசம்பர் 31 நிலவரப்படி உலகம் முழுவதுமாக 123 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த வளர்ச்சி வேகம் தொடருமானால் உலகின் மிக பெரிய ஆதார தகவல் தொடர்பு உபகரணமாக பேஸ்புக் உருவெடுக்கும் என பிரித்தானியாவைச் சேர்ந்த ஓவம் ஆய்வு நிறுவனத்தின் நிபுணர் நேஹா தாரியா தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் பேஸ்புக் வாடிக்கையாளர்களை அதிகம் பெற்று (18.30 கோடி வாடிக்கையாளர்களுடன்) அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 10 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களுடன் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் 2010ம் ஆண்டில் பேஸ்புக் கால் பதித்தது. ஐதராபாத்தில் முதன் முதலில் செயல்பாட்டைத் தொடங்கிய இந்நிறுவனம் அப்போது 80 இலட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றிருந்தது. மிக குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி கண்டுள்ள இந்த சமூக ஊடகம் தற்போது 10 கோடி உபயோகிப்பாளர்களை பெற்றுள்ளது. இதில் 8.40 கோடி பேர் செல்பேசி வாயிலாக பேஸ்புக்கை அணுகுவதாகவும், இந்தியாவில் பேஸ்புக்கின் வளர்ச்சிக்கு மொபைல் போன்கள் பெரிய பின்புலமாக உள்ளன என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment