யாழ்ப்பாணம்- பருத்தித்துறை தும்பளை பகுதியில் உள்ள பன்னங்கட்டை வீதியின் கால்வாய் ஒன்றிலிருந்து கிளைமோர் குண்டு ஒன்று இன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள கால்வாயை மக்கள் துப்புரவு செய்து கொண்டிருந்த நிலையில் அங்கு கிளைமோர் குண்டு இருப்பதை அறிந்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸாருக்கு மக்கள் வழங்கிய தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலுஸார் அங்கு விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த குண்டு யுத்த காலத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment