முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க புதுடெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசியுள்ளார்.
புதுடெல்லியில் நடக்கவுள்ள அனைத்துலக இந்து - பௌத்த மாநாட்டின்
சென்ற வேளையிலேயே இச் சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்ற வேளையிலேயே இச் சந்திப்பு இடம் பெற்றுள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாடு, இன்று தொடக்கம் எதிர்வரும் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பாஜக ஆதரவு விவேகானந்தா அனைத்துலக நிறுவகம், ரோக்கியோ பவுண்டேசன், அனைத்துலக பௌத்த சம்மேளனம் ஆகியன இணைந்து ஒழுங்கு செய்துள்ள இந்த மாநாட்டை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஆரம்பித்து வைத்தார்.
இந்த மாநாட்டில் இலங்கை, தாய்லாந்து, மொங்கோலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவும் இதில் கலந்து கொண்டுள்ளதுடன் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியையும் சந்தித்துப் பேசியுள்ளார்.
பிரச்சினைகளை தீர்க்க முடியாமல் இருக்க தீவிரவாதமே காரணம்
தீவிரவாதமே பல்வேறு பிரச்சினைகளும் தீர்க்கப்படாமல் இருக்க காரணமாகுமென இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
அனைத்து இன மக்களையும் ஒரே விதமாக நடத்துவது மிகவும் அவசியமானது. நாட்டில் நிலையான அபிவிருத்தியின் மூலம் முரண்பாடுகளுக்கு தீர்வு காண முடியும்.
பிரச்சினைகளுக்கு தீர்வுகாண வேண்டுமெனின் அப்பிரச்சினைக்கான மூல காரணம் கண்டறியப்பட வேண்டுமென, அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment