சர்வதேச விசாரணை தொடர்பினில் சம்பந்தன் தனது நிலைப்பாட்டை நாடாளுமன்றினில் வெளிப்படுத்த அழுத்தங்கள் அதிகரித்துள்ளது.சர்வதேச விசாரணையினையே தமிழ் மக்கள்
விரும்புகின்றார்கள் என்பதை வலியுறுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அறிவிக்க வேண்டும் என சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுக்கவுள்ளன.
ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் நிராகரித்துள்ள நிலையில் சம்பந்தன் குறித்த அமர்வினில் சத்தமின்றி நழுவியிருந்தார்.இது தொடர்பாக யாழ் ஆயர் இல்லத்தைச் சேர்ந்த அருட்தந்தை ஒருவர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதித் தலைவர் மாவை சேனாதிராஜாவிடம் நேற்று புதன்கிழமை தொடர்பு கொண்டு பேசினார் என்றும் ஆனால் அதற்கு சாதகமான பதில் கூறப்படவில்லை எனவும் கூட்டமைப்பு தகவல்கள் குறிப்பிட்டன.
சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வடக்கு கிழக்கு மாகாணங்களில் கையெழுத்து பெறும் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் உள்ளக விசாரணைதான் நடத்தப்படும் என கூறியுள்ளார்.
ஆனால் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இது தொடர்பாக எதுவும் கூறவில்லை.கட்சித்தலைவர் என்ற முறையிலும் சம்பந்தன் கருத்துக்கள் எதனையும் முன்வைக்கவில்லை.இது தொடர்பாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு அழுத்தம் கொடுக்க சிவில் அமைப்புகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment