யாழ். மாவட்டத்தில் இளம் சமூகத்தினர் மத்தியில் மது போதைத் தகராறுகள் அதிகரித்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்ற அதேவேளை மது போதை தகராறு காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை மட்டும் யாழ்ப்பாணத்தில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்பாணத்தில் இடம் பெறும் வன்முறைகள் மற்றம் குற்றச் செயல்களுக்கு காரணமாக அமையும் மதுபோதையில் ஈடுபடுவோரை கைது செய்து அதிக பட்ச தண்டனை வழங்கப்படும் என தாக யாழ். பொலிஸார் பொறுப்பதிகாரி எவ்.யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்து நடவடிக்கையில் பொலிஸார் விசேட செயற்பாடு ஒன்றினை முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொக்குவில், நாவாந்துறை, குருநகர், அரியாலை போன்ற பிரதேசங்களில் இவ்வாறான சம்பவங்கள் அதிகளவில் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அப்பகுதியில் உள்ள மதுபான கடைகள் மற்றம் விடுத்திகள் என்பனவற்றை பொலிஸார் தமது கண்காணிப்பிற்குள் கொண்டு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை யாழ் நகரப் பகுதியில் மதுபோதையில் இருந்த இளைஞர் குழுவின் கடும் தாக்குதலுக்கு இலக்கான ஆசிரியத் தம்பதியினரில் கணவன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த சம்பவமொன்று நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – மணிக்கூட்டு வீதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஆங்கிய ஆசிரியரான 44 வயதுடைய மாதவ மணிவண்ணன் என்பவரே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
அதேபோன்று, வேலனை பகுதியில இரவு நேரம் வீட்டிற்குள் நுழைந்து கணவனைத் தாக்கிவிட்டு மனைவியை கடத்திச் சென்று வல்லுறவு புரிந்தவர்கள் அவரை கிணற்றில் போட்டுக் கொலை செய்ய முயற்சி செய்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment