மல்லாவியைச் சேர்ந்த மாணவன் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுவதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றபோது விபத்தில் பலியாகியுள்ளார்.
இன்று மதியம் 12.10 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், மல்லாவியைச் சேர்ந்த தர்மலிங்கம் பிரதீப் (வயது 19) என்ற மாணவனே உயிரிழந்தார்.
இன்று மதியம் 12.30 மணிக்கு நடைபெறவிருந்த புவியியல் பாடத்துக்குத் தோற்றுவதற்காக சக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்றுள்ளார்கள்.
இந்த நேரம் ஓட்டங்குளம் சந்தியில் குறுகிய தூர சேவையில் தற்காலிகமாக ஈடுபடுத்தப்பட்ட பஸ்ஸுடன் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் பின்பக்கமாக இருந்துசென்ற மாணவன் மயக்கமுற்ற நிலையில் மல்லாவி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் மரணம் அடைந்துள்ளார்.
மற்றைய மாணவனான எஸ்.சுஜீவன் (வயது 20) என்பவர் மயக்கமுற்ற நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment