நடைபெற்று முடிந்த பொதுத் தேர்தலின் விருப்பு வாக்கு எண்ணும் பணிகளில் முறைகேடுகள் இடம்பெற்றதாக இலங்கை தமிழரசு கட்சியின் சாவகச்சேரி அமைப்பாளர் கந்தைய்யா அருந்தவபாலன் தெரிவித்துள்ளார்.ஆங்கில
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
வாக்களிப்புகள் நேர்மையான முறையில் இடம்பெற்றிருந்தன.
ஆனால் விருப்பு வாக்குகளை என்னும் போது, தமக்கு கிடைத்த வாக்குகள் சில ஆறாம் இடத்தில் இருந்த வேட்பாளர் ஒருவருக்கு வழங்கப்பட்டதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்ற ஆசனத்தை அவருக்கு வழங்குவதற்காகவே இந்த நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் தேசிய பட்டியல் வழங்கப்பட்ட விதத்திலும் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment