ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் 25 பேரின் உறுப்புரிமைகள் நீக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்க, பேராசிரியர் விஸ்வ வர்ணபால உட்பட 25 பேர் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவ் அறிவிப்பு தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இந்நிலையில், முன்னாள் பிரதமர்களான தி.மு.ஜெயரத்ன, ரத்னசிறி விக்கிரமநாயக்கவோடு ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேம ஜெயந்த, அநுர பிரியதர்ஷன யாப்பா, ஜனக பண்டார தென்னகோன் ஆகியோரும் இப்பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக அறியக் கிடைக்கிறது.
அத்துடன், பஷில் ராஜபக்ஷ, அர்ஜுன ரணதுங்க, ஹிருணிகா பிரேமசந்திர, மேர்வின் சில்வா, சஜின்வாஸ் குணவர்தன, ஜோன்ஸ்டன் ஃபெர்னாண்டோ, டிலான் பெரேரா, கெஹெலிய ரம்புக்வெல்ல, மஹிந்தானந்த அழுத்கமகே ஆகியோரும் செயற்குழுவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment