கிளிநொச்சி கரைச்சிப் பிரதேச செயலக பிரிவில் காணி உத்தரவுப் பத்திரம் இல்லாத காணிச் சொந்தக்காரர்களுக்கு காணி உத்தரவுப் பத்திரம் வழங்கும் முகமாக கரைச்சி பிரதேச செயலர் கோபாலபிள்ளை நாகேஸ்வரன் எடுத்த
துரித நடவடிக்கை காரணமாக காணிக் கச்சேரிகள் இடம்பெற்று வருகிறது.
இதன் பிரகாரம் தொண்டமான் நகர் மற்றும் அம்பாள்குளம், கந்தன்குளம் முதலான கிராமங்களுக்கான காணிக் கச்சேரிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளிலும் இவ்வாறான காணிக் கச்சேரிகள் இடம்பெற்றுள்ளன.
இக் காணிக் கச்சேரிகளில் தெரிவான காணி உரிமையாளர்களுக்கு விரைவில் வைபவரீதியாக காணி உத்தரவுப் பத்திரம் வழங்கப்படவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் காணி உத்தரவுப்பத்திரம் இல்லாதவர்கள் பலவித அசெளகரியங்களை அனுபவித்து வருவதுடன் வீட்டுத் திட்டம் உட்பட ஏனைய நல உதவித்திட்டங்களைப் பெறுவதிலும் அதிக சிரமங்களை எதிர்கொள்வதைக் கவனத்தில் எடுத்தே காணி உத்தரவுப்பத்திரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment