நடைபெற்று முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டவர்களை தோற்கடிக்கவேண்டும் என்று செயற்பட்ட பலர் இன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அம்பாறை மாவட்டத் தில் பாதுகாக்க இருப்பதாக
ஊடகங்களில் கருத்துத் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது என நாவிதன்வெளி பிரதேசசபையின் முன்னாள் தவிசாளர் சி.குணரெட்ணம் தெரிவித்தார்.
நாவிதன்00வெளியில் நேற்று முன்தினம் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்த லில் அம்பாறை மாவட்டத்தில் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்ட வேட்பாளர் வென்றுவிடக் கூடாது என்ற நோக்குடன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரும் மாநகரசபை உறுப்பினர் ஒருவரும் பிரதேச சபை உறுப்பினர்கள் இருவரும் செயற்பட்டது மிகவும் வேதனைக்குரியதும் கண்டனத்துக்குரியதுமாகும்
அம்பாறை மாவட்டமானது பெரும்பான்மை சமூகத்தினால் பாரிய அச்சுறுத்தலுக்குள்ளாகியதுடன் கடந்த கால யுத்த சூழ்நிலையால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த மக்களின் துயர்துடைக்கக்கூடிய பொருத்தமானவர்கள் இன்று இல்லாமல் இருப்பது வேதனைதான்
அம்பாறை மாவட்டத்தில் உள்ள நான்கு பிரதேச சபைகளையும் கல்முனை மாநகரசபையில் எதிர்க்கட்சியையும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள இலங்கை தமி ழரசுக்கட்சியே கைப்பற்றி இருந்தது. இதைவிட கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களாக அம்பாறை மாவட்டத்தில் இருந்து தெரிவானவர்களும் இலங்கை தமிழரசுக்கட்சி சார்ந்தவர்களாகவே இருந்தனர்.
நடந்து முடிந்த தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் வேட்பாளராக களம் இறக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியை சேர்ந்த கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஒருவரின் வெற்றி உறுதியாகி இருந்த நிலையில் இதனை தாங்கிக் கொள்ள வும் சகித்துக் கொள்ளவும் முடியாத தமி ழரசுக்கட்சியினைச் சேர்ந்த அரசியல்வாதிகள் பலர் இரகசியமாகவும் வெளிப்படையாகவும் செயற்பட்டதன் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வெற்றி வாய்ப்பு தடைப்பட்டதுடன் அதுவேறு கட்சிக்குச் சென்று விட்டது. இதற்குக் காரணம் தமிழரசுக் கட்சியின் முக்கிய உறுப்பினர்களின் சுயநல ப்போக்கே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை
இதில் வேடிக்கை என்னவென்றால் எல் லாம் முடிந்து விட்டது தங்களது அரசியலை தக்கவைக்க வேண்டும் என்பதற்காக பத்திரிகைகளில் எனது உயிர் இருக்கும்வரை தமிழரசுக்கட்சியை அம்பாறையில் யாராலும் அழித்துவிட முடியாது என்று அறிக்கை விடுவது தான் வினோதமாக இருக்கின்றது.
இப்படியான அறிக்கைகளை விட்டு உண்மையான இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஆதரவானவர்களை உசுப்பேற்றுவதை விட்டு விட்டு தேர்தல் காலத்தில் எந்த கட்சிக்கு ஆதரவு கொடுத்தார்களோ அதே கட்சியில் இருந்து அந்தக்கட்சிக்காக உண்மையானவர்களாக இருக்க தங்களை தயார் படுத்திக்கொள்ள வேண்டும். இதுவே எமது அம்பாறை மாவட்ட ஒட்டுமொத்த இலங்கை தமிழரசுக்கட்சி ஆதரவாளர்களின் நிலையாக உள்ளது எனவும் அந்த அறிக்கையை சுட்டிக்காட்டப்பட்டது.
No comments:
Post a Comment