மூன்று பிள்ளைகளின் தாயான சேகர் ஜெராணி தனது கணவணை இறுதியுத்தத்தின்போது, இராணுவம் சரணடைய சொல்லியதிற்கு இங்க முல்லைத்தீவு வட்டுவால் பகுதியில் வைத்து இராணுவத்திடம் ஒப்படைத்துள்ளார்.
ஒப்படைக்கபட்ட தனது கணவன் இன்றுவரை வீடு திரும்பவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சேகர் ஜேராணியாகிய எனக்கு மூன்று பிள்ளைகள் உண்டு. இறுதி யுத்தகாலத்தில் முல்லைத்தீவு வட்டுவால் பகுதியில் வைத்து இரணுவத்திடம் எனது கணவனை ஒப்படைத்த நிலையில் இராணுவம் அவரை கொண்டு சென்றது.
கணவனோடு இருக்கையில் நாங்கள் நன்றாக இருந்தோம். தற்போது கூலிவேலை செய்து பிள்ளைகளுடன் பல கஸ்டத்தின் மத்தியில் வாழ்ந்து வருகின்றோம்.
2009ம் ஆண்டு மே மாதம் 19ம் திகதி வட்டுவால் பகுதியில் பல மக்கள் மத்தியில் எனது கணவனை விசாரித்து விடுவதாக சொல்லி இராணுவம் கூட்டி சென்றது.
அவரை பஸ்சில் ஏற்றுவதை நான் பார்த்து கொண்டிருந்தேன் அதன் பின் அவரை எங்கு கொண்டுபோனார்கள் என்று தெரியவில்லை. பின் எங்களை பல இடங்களில் நிறுத்தி, நிறுத்தி 21ம் திகதி ஆனந்த குமாரசாமி முகாக்கு கொண்டு சென்றனர்.
இராணுவத்திடம் ஒப்படைத்த எனது கணவனை விசாரித்து பின் விடுவதாக சொல்லியே கூட சென்றார்கள். ஆனால் அவர் தொடர்பாக எந்த தகவலும் எனக்கு இதுவரை கிடைக்கவில்லை.
அதன் பின் எனது கணவன் தொடர்பாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம், மனித உரிமைகள் தொடர்பாக நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிடமும் பதிவினை மேற்கொண்டேன். ஆனால் அவர் தொடர்பாக எந்த தகவலும் எனக்கு கிடைக்க வில்லை
இது தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை புதுகுடியிருப்பு, கச்சேரியில் நடைபெற்றபோது எனது முறைபாட்டினை பதிவு செய்தேன்.
இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் எனது கணவனை நான் இராணுவத்திடம் ஒப்படைத்தது தொடர்பாக தெரிவித்தேன்.
அதற்கு ஆணைக்குழு நீங்கள் போங்க அம்மா, நாங்கள் விசாரணை செய்து அவர் தொடர்பாக உங்களுக்கு அறியத்தருவோம் என்றார்கள். ஆனால் அதற்கு பிறகு ஒரு தகவலும் எனக்கு கிடைக்கவில்லை.
எனது கணவன் எங்கு இருந்தாலும் வருவார் என்ற நம்பிக்கையில்தான் நான் இருக்கின்றேன். ஜனாதிபதி ஆணைக்குழுவில் எங்களுக்கு நம்பிக்கையில்லை சர்வதேச விசாரணையே எமக்கு வேண்டும் என கண்ணீர் மல்ல தெரிவித்தார்.
No comments:
Post a Comment