புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதமர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாக அதன் தலைவர் என்.எம். அமீன்
தெரிவித்தார்.
அதேவேளை புதிய பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் கலந்துரையாடலொன்றையும் ஏற்பாடு செய்யவுள்ளதாகவும், இக் கலந்துரையாடலில் முஸ்லிம் சமூகம் சார்ந்த விடயங்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக பணியாற்றுவது தொடர்பான விடயங்கள் மற்றும் தேசிய ரீதியாக நாட்டின் நலன் பேணும் விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவியேற்பை தொடர்ந்து, ஒரு தினத்தில் நடாத்தவுள்ளதாகவும் அதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ லங்கா முஸ்லிம் கவுன்சில் மேற்கொண்டு வருவதாகவும் என். எம். அமீன் டெய்லி சிலோனுக்கு மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment