யாழ்.மாவட்ட செயலகத்தில் அரச அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையில் முன்னாள்
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பு அலுவலகமாக
செயற்பட்டு வந்த பிரிவு அவசர அவசரமாக இழுத்து மூடப்பட்டுள்ளது.
முன்னதாக டக்ளஸ் தேவானந்தாவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ யாழ்ப்பாண மாவட்ட இணைத்தலைவராக நியமித்திருந்தார். இந்த நியமனத்தைத் தொடர்ந்து டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் தனக்கு என ஓர் காரியாலயமொன்றை அமைத்துக்கொண்டிருந்தார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் 42ம் இலக்க அறையில் இந்த காரியாலயம் செயற்பட்டு வந்தது.
இந்த அலுவலகத்திற்கான இணைப்பாளரென கனகரத்தினம் மகாவித்தியாலய ஆங்கில ஆசிரியரான நபர் ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நபர் அரச அதிகாரிகளை மிரட்டுவது முதல் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் டக்ளஸை முன்னிறுத்தும் நிகழ்வுகளை நடத்தி வந்திருந்தார். அத்துடன் ஏனைய அரசியல்கட்சி ஆதரவாளர்களை பந்தாடியும் வந்திருந்தார்.
தற்போது புதிய அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டதனைத் தொடர்ந்து காரியாலயம் மூடப்பட்டுள்ளது. இவ்வலுவலக இணைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த நபரும் காணாமல் போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment