அண்மையில் 110க்கு மேற்பட்ட இனத்தவர்கள் வசிக்கும் லண்டவ் நகரத்தின்
வெளிநாட்டவர் அமைப்பின் தேர்தல் நடைபெற்றது. அதில் செல்வன் ஆரூரன்
குலேந்திரராசா அதிகப்படியான வாக்குகளைப் பெற்று முதலிடத்தைப்
பெற்றுக் கொண்டார். 15.01.2015 பொங்கல் தினத்தன்று லண்டவ் நகரசபை மண்டபத்தில் நகரமுதல்வர் திரு. Hans-Dieter-Schlimmer முன்னிலையில் வெளிநாட்டவர் அமைப்பை ஒழுங்கமைப்பதற்கான முதற் கூட்டம் நடைபெற்றது. அப்போது அமைப்பின் தலைவர் தெரிவு நடைபெற்றபோது இரண்டு பேர் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டு இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அதிலும் ஆரூரன் குலேந்திரராசா அதிகப்படியான வாக்குகள் பெற்று அமைப்பின் தலைவராக தெரிவானார்.

நகரசபை முதல்வர் ஆரூரனை பதவியை ஏற்று தொடர்ந்து கூட்டத்தொடரை நடத்துமாறு
உத்தியோக பூர்வமாக அழைத்து தனது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும்
தெரிவித்ததோடு லண்டவ் வரலாற்றில் முதல் முதல் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர்
இப்பதவியை அலங்கரிப்பதையிட்டு தானும் லண்டவ் நகரசபை உறுப்பினர்களும் பெருமை
கொள்வதாக கூறினார்.
அத்தோடு தொடர்ந்து வரும் 5 வருடங்கள் இந்த அமைப்பை பலமாக கட்டியெழுப்பி தங்களோடு வெளிநாட்டவர்கள் இணைந்து வாழும் உறுதிப்பாட்டை மேலும் பலப்படுத்தி உழைக்குமாறு அன்போடு கேட்டுக்கொண்டார்.
செல்வன் ஆரூரன் குலேந்திரராசா கூட்டத்தை தொடர்ந்து நடத்த ஆரம்பித்த போது தமிழில் முதல் வணக்கம் சொல்லி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துக்களையும் தமிழிலே கூறி தனது உரையை ஆரம்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்துடன் Rheinland-Pfalz மாநிலத்தின் AG der Ausländerbeiräte (மாநிலத்தின் வெளிநாட்டவர் அமைப்பின்) தலைவராகவும் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார்.

No comments:
Post a Comment