January 16, 2015

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் மணல் அகழ்வினை உடன் நிறுத்துமாறு கோரி போராட்டம்!

வடமராட்சி கிழக்கில் இடம்பெறும் மணல் அகழ்வினை உடன் நிறுத்துமாறு கோரி இன்றைய தினம் போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, வலி.வடக்கு மீள்குடியேற்றக் குழு, பார ஊர்திகள் சங்கம் மற்றும் பல்வேறு கிராம அமைப்புக்கள் இப்போராட்டத்திற்கு முழுமையான ஆதரவினை வழங்கவுள்ளன.

இந்த போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொண்டு கோரிக்கைகளுக்கு வலுச் சேர்க்குமாறு போராட்ட ஏற்பாட்டுக் குழு கேட்டுக் கொண்டுள்ளது.


வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம், நாகல் கோவில் மக்கள் ஒன்றியம், வடமராட்சி கிழக்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கம் ஆகியனவற்றில் ஒன்றின் அனுமதி மணல் அகழ்விற்கு கட்டாயம் கோரப்பட வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மண் விற்பனை செய்யும் முகவல்களை தவிர்ந்த உண்மையாக மண் தேவை உள்ளோருக்கு அனுமதி வழங்க வேண்டும். மணல் அகழப்பட்ட இடங்களில் மரங்கள் நாட்டப்பட வேண்டும். வடமராட்சி கிழக்கு உழவு இயந்திர உரிமையாளர்கள் கூட்டுறவுச் சங்கம் பதிவு செய்ய விடுக்கப்படட தடை உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

வடமராட்சி கிழக்கு உழவு இயந்திரங்கள் மட்டும் உள்ள மணல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட வேண்டும்.கனரக வாகனங்களினால் மணல் அகழ்ந்து ஏற்றுவதை நிறுத்தி அதற்கு மனித வலு பயன்படுத்தப்பட வேண்டும்.

அத்துடன் வடமராட்சி கிழக்கில் சுற்றுச் சூழல் பாதுகாப்பு குழு அமைக்கப்பட வேண்டும்.மணல் அகழ்வினால் சுரண்டப்பட்ட நிதிகள் அப்பிரதேச மக்களின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.

மேற்படிக் கோரிக்கைகளை முன்வைத்தே இன்றைய போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment