மீனவர்களின் மரண தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும். இலங்கை சிறையிலுள்ள 24 மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 82 விசைப்படகுகளை விடுவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக, இராமேசுவரத்தில் மீனவப் பிரதிநிகள் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அதில், 5 மீனவர்களின் மரண தண்டனைக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற வேலை நிறுத்தம், இன்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
மேலும் ஒரு வார காலத்திற்குள் மத்திய அரசு இலங்கைக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் தண்டனையை நிறுத்திவைக்க அழுத்தம் கொடுக்கத் தவறினால் நவம்பர் 7ம் திகதி அனைத்து விசைப்படகு மீனவர் பிரநிதிகளின் அவசரக் கூட்டத்தை கூட்டி பாராளுமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்கப்படும், என தீர்மானம் இயற்றப்பட்டது.
No comments:
Post a Comment